பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழுத அன்னையும் ஐவரின் மனக்கலக்கமும் 您感器 என்று நமக்குக் காட்டி இறையநுபவத்தில் ஆழங்கால் படுகின்றார்; நம்மையும் ஆழங்கால் படச் செய்து விடு கின்றார். கண்ணபிரான் தன் அவதார காலத்தில் செய்த சேட்டைகளுள் மையூசிய கண்ணையுடைய இளங்கோவியர்தம் துகில் வரிவளை, மடநெஞ்சு என் பவற்றை மட்டிலும் களவாடியதை ஈண்டுக் குறிப்பிட்டு வைணவ தத்துவமாகிய சரீர சரீரி பாவனையைத் தெளிய வைக்கின்றார். சித்தாகிய உயிரும் அசித்தாகிய புவனங் களும் எம்பெருமானின் உடலாக இருப்பது என்பதுதான் இத்தத்துவம். இந்தத் தத்துவத்தை ராய. சொ. குறிப் பிடவில்லை. அக்காலத்தில் இத்தத்துவம் எனக்குத் தெரியாது. ராய. சொ. வுக்கும் தத்துவ நோக்கில் அவாவும் அக்கறையும் அதிகம் இல்லை என்பதை அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியதால் நான் அறிவேன். - பார்த்தன் தேரை அடைந்ததும் பார்த்தசாரதி பகலவன்தன் மதலையை நீ பகலோன் மேல்பால் பவ்வத் தில் படுவதன்முன் படுத்தி’ என்று பக்குவமாகக் கூற பார்த்தனும் அஞ்சரீகம்” என்ற கணையை கன்னனின் இதயத்தை இலக்காக வைத்து எய்கின்றான். கன்னனும் தேர்த்தட்டின்மீது சாய்ந்து விடுகின்றான். இந்தக் காட்சியை வில்லிபுத்துராழ்வார். கருடனது திருத்தோளில் கண்ட கோலம் கண்ணினும்நெஞ் சினும் நிற்க கருணை ஆதி புருடனது திருநாமம் தனது நாவில் போகாமல் நனிவிளங்க புதைந்து வாளி வருடம் உடல் குளிப்பிக்க செம்பொன் தேர்மேல் மன்னர்எலாம் புடைகுழ வையம் காக்கும் குருடன்மகன் அருகிருந்து சோகம் கூர குற்றுயிரின் உடன்கிடந்தான் கொடையால் மிக்கோன்’ 2. வி. பr: 17 ஆம் போர்- 253