பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நினைவுக் குமிழிகள்-3 ஆவதற்கு முன் கன்னி மாடத்தில் இருந்தபோது முனிவர் அருளிய ஆறு மந்திரங்களுள் ஆதவனுக்கு உரிய மந்தி ரத்தைச் சோதித்தேன். இரவி தோன்றி அவன் அருளால் நின்னைப் பெற்றேன். மீண்டும் கன்னி நிலையை அடைந் தேன். அவன் அருளால் பெற்ற அன்றே நின்னைப் பொற். பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்து மூடி கங்கை ஆற்றில் விடுத்தேன். அருளே இல்லாத இந்தப் பாவியாகிய யான், துரியோதனை நினக்கு உயிர்த்தோழன் ஆனதையும், நின் வீரச்செயல்களையும் கேட்டு நன்றே என் தவப்பயன்’ என்று நினைந்து உயிர் வாழ்ந்தேன், இப்போது வீட்டு லகத்தை அரசாளச் செல்கின்றாயோ? நினக்கு அறத்தில் வழுவாத உதிட்டிரன் முதலிய ஐவரும், உரகக் கொடியோன் முதலிய நூற்றுவரும் தம்பி மார்கள் உளர். அவர்கள் நின் எண்ணக் குறிப்புகளை அறிந்து ஏவல் செய்வார்கள். ஒரு குடைக்கீழ் இந்த உலகத்தை ஆளும் பேறும் கிடைத்தது. ஆனால் நின்விதி வேறோர் முறையில் செயற்பட்டது. மேகமும் நானும் படியான வள்ளலே! கடவுளர்தம் மாயையினால் எல்லாம் அழிந்து நீயும் பயன் பெறாமல் தள்ளப் பெற்றாய்” என்று புலம்பிய வண்ணம் கன்னன் இருந்த தேர் நோக்கி வரு கின்றாள். அமர்க்களத்தில் இருந்த வேந்தர்கள் யாவரும்: வியக்கும் படியாக ஏங்கி ஏங்கி கன்னனை அன்போடு எடுத் தணைத்து முலைக்கண் ஊறல் அமுதுாட்டுகிறதையும், இறந்த கன்றினை இணைந்து இணைந்து அருகில் நிற்கும் பசுவைப்போல் துன்பப்பட்டான் குருநாடன் திருத்தேவி குந்திதேவி. அன்னையின் மடியிலும் கரத்திலும் கன்னன் உடல் கிடக்கும் நிலையில் ஆவி பிரிந்து செல்லுகின்றது. துரியோதனன், : - - இணையாரும் இலாஅரசே யாரைக் கொண்டு அரசுஆள இருக்கின் றேனே." 4. வி. பா. 17-ம் போர்-260