பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ 2&岳 நெருங்கிப் பழகுபவர்; அன்பாகப் பேசுவார். அவர் என் நூலை முன்னரே பார்த்திருந்தார்; இப்போதும் பார்த் தார். அவர் என்னை நோக்கிக் (கிண்டலாக?) கேட்டார். எப்பொழுது மீண்டும் யானை குட்டி போடுகிறது?’’ என்று. இதன் பொருள் எப்பொழுது பெரிய நூல் வெளிவரப் போகின்றது?’ என்பது இதன் தொனிப் பொருள். அதற்கு நான் பன்றிகள் ஒரு சமயம் பல குட்டி கள் போடும். குஞ்சரம் அடிக்கடி போடாது; எப்பொழு. தாவது ஒன்று போடும்' என்று சொன்னேன். என் மதிநுட்பமான விடையைக் கண்டு அருகி லிருந்த து. மா. பரிமணம், உ. பால சுப்பிரமணியம், வ. சுப. மாணிக்கம் முதலிய தமிழ்ப் பேராசிரியர்கள் நன்று, நன்று’ என்று கூறி நகைத்தனர். இப்போது தெ. பொ. மீ. சொன்னார். ரெட்டியார் எப்போதும் இப்படித்தான். அவசரமாகப் பெரிய நூலை எழுதுவார். பதிப்பிக்கிறதற்கு ஆள் இருக்கின்றது என்று உடனேயும் வெளியிட்டு விடுவார்' என்று கூற, அருகி. விருந்த ஒரி கவர் நகைத்தனர்; மற்றவர்கள் வாளா இருந் தனர். இதிலிருந்து வாளா இருந்தவர்கள் என் பணியைப் பாராட்டினர் என்றும், நகைத்தவர்கள் சிறிது பொறாமைப்பட்டனர் என்றும் புரிந்து கொண்டேன். நானும் ஒரளவு உள நூல்களைப் படித்தவன்; வாழ்க்கை யிலும் பலரையும் கூர்ந்து நோக்கியவன். இரண்டு வரி களுக்கிடையிலும் படித்து உண்மை காணல்" (Reading between the lines) stairp oft@ao LipGuorough srir நினைவிற்கு வந்தது. நான் தெ. பொ. மீ. அவர்களைக் கேட்டேன்; நூல் எழுதி வெளியிடுவதில் உங்கள் அறிவுரைதான் என்ன?’’ என்று, அவர் சொன்னார்: நூலை எழுதி முடிக்க. வேண்டும். பிறகு அந் நூலின் கைப்படியைக் கட்டி வைத்து.