பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翠登罚 நினைவுக்குமிழிகள்.3 மேலை நாட்டு நூல்களிலிருந்தும் நம் நாட்டு நூல் களிலிருந்தும் பல கருத்துகளைத் தெரிந்து கொண்டு கவிதை பயிற்றும் முறையைப் பற்றி பலவாறு சிந்திக்கும் வாய்ப்புகள் பெற நேர்ந்தது. இக் கருத்துகளை முதன் முதலாகக் காரைக்குடியில் பி.டி. மாணாக்கர்களுக்குக் கற்பித்தேன்; சிறிய வகுப்பாதலால் கலந்து யோசிக்கும் சந்தர்ப்பங்களும் இருந்தன. பல நல்ல மாணாக்கர்கட்குக் கற்பிக்கும் பேறும் கிடைத்தது. பல நல்ல மாணாக்கர்கள் இருப்பினும் ஒருவரை மட்டிலும் இக் குமிழியில் நினைவு கூர்கின்றேன். இவர் பெயர் மீனாட்சி சுந்தரம்; மதுரை மாவட்டம் அருப்புக் கோட்டையைச் சேர்ந்தவர். இளங்கலைப் பட்டம் பெற்றவர். சென்னைத் தலைமைச் செயலகத்தில் பத்தாண்டுகட்கு மேல் பணியாற்றி பகுதி அலுவல்ர் (Section officer) பதவி தம் மன நிலைக்கு ஒவ்வாமையால் தம்மை அதிலிருந்து விடுவித்துக் கொண்டு பி.டி. வகுப்பில் சேர்ந்தவர். நிட்டைப் பயிற்சியுடையவர் தாம் அடிக்கடி இறைமைக் காட்சிகளை அநுபவித்ததாகக் கூறுவார். குழந்தை மனமுடையவர். வகுப்பில் நன்றாகக் கவனித்துக் குறிப்புகளை எழுதிக் கொள்வார். நூலகத்தில் அதிகமான நூல்களைப் படிப்பார்; மிகச் சிறந்த ஆசிரியராகத் திகழும் அரிய கூறுகளை இவரிடம் கண்டேன். மாதிரிப் பள்ளியில் ஒருநாள் குமரகுருபரரின் மீனாட்சியம்மைக் குறத்திலுள்ள ஒரு பாடலை ஐந்தாம் படிவ மாணவர்க்கு நடத்தியதைக் கண்டேன்; முதல்வர் திரு. P. துரைக்கண்ணு முதலியாரையும் இப்பாடத்தைக் கவனிக்குமாறு செய்தேன். தமிழ் வகுப்பு ஆசிரிய மாணாக்கர்களையும் இப்பாடத்தைக் கவனிக்க ஏற்பாடு செய்தேன். பாடல் இது: கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக் கிழங்குகல்லி எடுப்போம்; - குறிஞ்சிம்லர் தெரிந்துமுல்லைக்' கொடியில்வைத்துத்' தொடுப்ப்ோம்;