பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுக்குமிழிகள்-3 துறைகளுக்கான கட்டடங்கள் நிறைவு பெற்றிருந்தன. இவற்றில் ஒரு கட்டடத்தின் முதல் தளத்தில்தான் பயிற்சிக் கல்லூரி ஓராண்டுக் காலம் இயங்கியது. வள்ளல் அழகப்பரின் கவனம் ஆசிரியர் நியமனத் திலும் சென்றது. நாட்டில் திறமையான ஆசிரியர்களை யெல்லாம் தம் கல்லூரிகளில் சேர்த்து விட வேண்டும் என்று அவர் நல்லுள்ளம் விழைந்தது. ஆகவே கலைக் கல்லூரியின் முதல்வராக ஒய்வு பெற்ற கல்வித்துறை இயக்குநர் தென்னட்டி சூரிய நாராயணா (தெலுங்கர்) நியமனம் பெற்றார். அங்ஙனமே திரு. ஆ. முத்து சிவன் (தமிழ்), திரு. V. சுவாமிநாதன் (வேதியியல்}, திரு. K. G. கிருஷ்ணன் (இயற்பியல், மாணிக்கவாசகம் பிள்ளை {க ண த ம் ), திரு. K. ஏகாம்பரநாதன் (விலங்கியல்), திரு. C. இராசகோபாலன் (நில உட் கூற்றியல்), டாக்டர் கருணாகரமேனன் (ஆங்கிலம்) என்று பேராசிரியர்களாக நியமனம் பெற்றிருந்தனர். தென்னட்டி சூரிய நாராயணா 1950 இல் ஒப்பந்தப்படி விலகிக் கொண்டார். ஆகவே கலைக் கல்லூரிக்குத் ருவனந்தபுரத்தைக் சார்ந்த திரு. ஏ. நாராயண தம்பியும் புதிதாகத் திறக்கப் பெற்ற பயிற்சிக் கல்லூரிக்குத் திருச்சூரைச் சார்ந்த திரு . ஐ. நாராயண மேனனும் முதல்வர்களாக நியமிக்கப்பெற்றனர். நான் காரைக்குடி சென்றபோது இருவருமே வேலையில் அமர்ந் திருந்தனர். பயிற்சிக் கல்லூரி திறக்கப்பெற்ற ஆண்டே நாற்பது من مستمر பேர் தங்கக் கூடிய உணவு விடுதியும் திறக்க ஏற்பாடு செய்யப் பெற்றது. காரைக்குடிச் சிவன்கோயில் அருகி லிருக்கும் மீனாட்சிசுந்தரேசுவரர் பள்ளிக்குச் சொந்தமான அமிர்தவல்லி உணவு விடுதிக் கட்டடம் பல ஆண்டுகள் மூடிக் கிடந்தது. இதனை கல்லூரி உணவு விடுதிக்குப் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பெற்றது.