பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி - 145 38. குடிமைப் பயிற்சி முகாம்கள் அன்றைய உயர்நிலைப்பள்ளிக் கல்வித் திட்டத்தில் மாணாக்கர்கட்குக் குடிமைப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றிருந்தது. ஆகவே, அதைப் பயிற்சிக் கல்லூரியிலேயே பயிற்சி பெறும் பி.டி. மாணாக்கர்கட்கு அளிக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. ஆண்டு தோறும் கல்லூரிக்கு வெளியே (வெளியூர்களில்) 10 நாட்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்பெற்று வந்தது. இளையாத்தங்குடி, பிள்ளையார்பட்டி, மாற்றுார், இராமேச்சுரம், சூரைக்குடி என்ற இடங்கள்தாம் முகாம் அமைக்கவும், பயிற்சிக் 35&f Goffs & அமையவும் பயன்பட்டன. இங்கெல்லாம் செட்டியார்கள் விசேட காலங்களில் தங்குவதற்கு பெரிய பெரிய விடுதிகள் கட்டிப் போட்டிருந்தமையால் அவை நாங்கள் தங்குவதற்கும். வகுப்புகள் நடத்துவதற்கும், உணவு தயாரித்து உண்பதற்கும் வசதியாக இருந்தன. ஓராண்டு திருப்பாராய்த்துறை இராம கிருஷ்ண தபோ வனத்தில் முகாம் அமைத்து பயிற்சி நடைபெற்றது. இளையாற்றங்குடி : இந்தவூர் கீழச்சீவல்பட்டியி விருந்து 2 கல் தொலைவு. காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வந்து திருப்பத்துார் செல்லும் சாலையைத் தவிர்த்து வேறொரு கிளை சாலை வழியாகக் கீழைச் சீவல்பட்டி செல்ல வேண்டும். அங்கிருந்து இளையாற்றங் குடி செல்ல வேண்டும். நல்ல அமைதியான ஊர். ஒரு சமயம் காஞ்சி பெரிய சுவாமிகள் தாம் இறைவன் திருவடிப் பேறு அடையும் போது இந்த ஊரில்தான் தம்மை அடக்கம் செய்ய வேண்டும் என்று இந்த ஊரைத் தேர்ந்தெடுத்ததாகச் செய்தித் தாள்களில் படித்ததாக