பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

孪 3} ) நினைவுக் குமிழிகள்-3 டாக்டர் வள்ளலுக்கு இங்குள்ள கோயில் குடும்ப வழி பாட்டுக்கு உரியது. இங்கு முகாம் நடைபெற்ற போது திரு. எஸ். சங்கரராஜ நாயுடு அவர் துணைவியாருடன் இருப்பூர்தி சந்திப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டு நான் சிற்றுந்தில் (Wan) வந்து அவரையும் அவர் துணைவியாரை யும் (புதுமணத் தம்பதிகளாகக் காணப்பட்டனர்) முகா மிற்கு அழைத்து வந்தேன். அவர் துணைவியார் தேசியக் கொடி ஏற்றினார்: நாயுடு 10 நிமிடம் மாணவர்கட்கு உரையாற்றினார். இஃது இன்றும் என் மனத்தில் பசுமை. யாகவே உள்ளது. - இராமேச்சுரம் : ஒராண்டு இங்கு முகாம் நடை பெற்றது. உணவிற்கு ஒர் உணவு விடுதி மூலம் ஏற்பாடு செய்தோம். ஒருநாள் உணவுமுறைகள் சரியாக இருந்தன. வர வர தேய்பிறைகள் போல் குறைந்து விட்டன. குத்தகை பேசிய அய்யர் ஏமாற்றி விட்டார். நடுவில் எங்களால் மாற்று ஏற்பாடு செய்ய முடியவில்லை. அப் போது கண்டனுாரார் விடுதியில் தங்கியிருந்தோம். பிள்ளையார் பட்டி : காரைக்குடியிலிருந்து குன்றக்குடி வழியாக திருப்புத்துரர் செல்லும் சாலையின் மீது உள்ளது. 100 கெ.துாரம் நடந்து ஊருக்குள் செல்ல வேண்டும். சா. கணேசன் இக்கோயிலில் உரிமையாளர் களுள் ஒருவர். இவர் பரிந்துரைத்தபடி ஓராண்டு இங்கு. முகாம் இட்டோம், முதல்வர் துரைக்கண்ணு முதலியார் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முகாம் இது. மாண்புமிகு கல்விஅமைச்சர் திரு. தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் காலத்தில் குடிமைப் பயிற்சித்திட்டம் உருவாகியது. இதன் தந்தை திரு. T. W. லேகண்டன், நெல்லையில் ஒர் உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக இருந்த என் நண்பர் திரு. T. W. ஆறுமுகம்பிள்ளையின் திருத். தமையனார். பத்துநாட்கள் திரு நீலகண்டம் பிள்ளை அவர்களின் தலைமையில்தான் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.முதல்வர் முதலியார் இவரைச் சிறப்பு விருந்தின