பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வு 3.1% இயற்கையிலேயே என்னை சுறுசுறுப்புடையவனாகப் படைத்தான் இறைவன். எந்தச் சமயத்திலும் நான் சுறு சுறுப்பின்றி சோம்பலுடையவனாக இருந்ததில்லை. காரைக்குடி விளம்பரத்தைப் பார்க்கச் சந்தர்ப்பமின்றிச் செய்ததும், அதற்கு விண்ணப்பிக்கச் செய்யாதவாறு செய்ததும் இறைவன் திருவுள்ளமே என்பது என் கருத்து. என்னை வேறு திசையில் சுறுசுறுப்புடையவனாகச் செய்து காரைக்குடி நடவடிக்கைகளையே நான் கவனிக்காது செய்து விட்டான். இஃது என் தீவினையின் பயனாகும். ஐந்தாறு ஆண்டுகள் காரைக்குடியில் மிகத் தீவிரமாக எழுத்துப்பணியில் என் கருத்தினைச் செலுத்தி அதில் ஆழங்கால் பட்டவனாக இருந்தேன். நூல்களின் எல்லாக் கைப்படிகளையும் சா. க. விடம் காட்டுவதுண்டு. அவர் எப்படியோ என் திறமையை அளந்து கொண்டு விட்டார். என்னை இப்பணியில் மேலும் மேலும் ஊக்கிக் கொண்டே இருந்தார். ஒரு நூலை வெளியிடுவதற்கும் வாய்ச் சொல்” அருளி உதவினார். தமிழ் பயிற்றும் முறை” என்ற பெரு நூலும் வெளிவந்தது. அஃது எனக்குப் பெரும் புகழை ஈட்டியது. - பேராசிரியர் திருவேங்கடாச்சாரி ஒரு சமயம் படிப்புதவி பெற்று ஆறு திங்கள் அமெரிக்கா சென்றிருந் தார். அதன் பிறகு தம் விடுப்பை நீட்டிக் கொண்டு மேலும் மூன்று திங்கள் தங்கி விட்டார். அங்குக் கல்வியில் (Education) ஒரு எம்.ஏ. பட்டமும், போதிப்பதில் (Teaching) ஒரு எம். எட் பட்டமும் பெற்றுத் திரும்பி னார். அப்போது அவர் இருந்த பதவிக்கு (Professorship) நான் முயன்றேன். அப்பொழுது பயிற்சிக் கல்லூரியில் உள்ள இரண்டு ஆசிரியர்கள் பேராசிரியர் நிலையில் இருக்க வேண்டும் என்பது பல்கலைக் கழக விதி. திரு ஆச்சாரி அமெரிக்கா சென்று விட்டார். ஒரு பேராசிரியர்தான் ஆசிரியர்க் குழுவில் இருந்தார். என்னைப் பேராசிரியர் நிலைக்குத் தற்காலிகமாக் உயர்த்துமாறு நிர்வாகத்திற்கு