பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பதவி உயர்வு 密2惠 ஆக்கம் என்ற நூலுக்கு திரு. சி. சுப்பிரமணியம் அணிந்துரை நல்கினார்; நூலும் முன்னாள் கல்வி அமைச்சர் திரு. தி. சு. அவினாசிலிங்கம் அவர்கட்கு அன்புப் படையலாக்கப் பெற்று வெளி வந்தது. அமெரிக்காவிலிருந்து திரும்பிய பேராசிரியர் திரு. வேங்கடாச்சாரி நடுவண் அரசு பொறுப்பில் கல்லூரியுடன் இணைக்கப் பெற்ற விரிவுத்துறைப் பணியில் (Extension Services). இணைப்பு அதிகாரி ஆனார். இப்பதவி பல ஆண்டுகள் நீடிக்கும் எனத் தெரிந்ததால், பேராசிரியர் பதவிக்கு முயன்றேன்: நிர்வாகத்திற்கு விண்ணப்பமும் வைத்தேன். இப்பொழுது அழகப்பர் கலைக் கல்லூரிக்கு திருநெல்வேலி இந்து கல்லூரி முதல்வராக இருந்த அலெக்ஸ் எண்டர் ஞானமுத்து முதல்வராகப் பொறுப் பேற்றிருத்தார். இவர் பயிற்சிக் கல்லூரியின் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினரான்ார். c. v.C.T.V. வேங்க்ட்ாசலம் செட்டியார் தாளாளர் பொறுப்பேற்ற பிறகு, அவருக்கும் சா. க.வுக்கும் கருத்து வேறுபாடு இருந்தமையால் சா. க. நிர்வாகத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் சற்று ஒதுங்கியே இருந்தார்.அதனால் என்விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. முன்னாள் தாளாளர் திரு, K.W.AL.M. இராமநாதன் செட்டியாரைப் பார்த்துப் பேசுமாறு யோசனை கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். (அவர் அறக்கட்டளையில் உறுப்பினர் பதவியைத் துறக்க வில்லை). - Carpಹಣಹ9, எத்தனையோ பிரச்சினைகள் எழு கின்றன. பெரியவர்களின் ஆசியும் உதவியும் சிலருக்கு எளிதில் பின்னணியாக அமைந்து விடுகின்றன. அவர்கள் உதவி இயல்பாக அமைந்துவிடுகிறது; அவர்களும் மிகவும் ஈடுபாட்டுடன் நுழைந்து செயலாற்றுகின்றனர். சிலருக்கு அவ்வாறு அன்மவதில்லை; ஒரேர் உழவன்போல் எல்லாச் செயல்களையும் அவர்களே ஆற்ற நேரிடுகின்றது. நி 21