பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.24. நினைவுக் குமிழிகள்.3 அதனால் நீ இப்போது உடனே உன் கையாலேயே ஆணையைத் தட்டச்சு செய்து 4 படிகள் எடு. முதல் வேலையாக ஒரு நகலை மலேயாவுக்கு அனுப்பிவிடு.: என்று கூறியவர் என் பக்கம் திரும்பி, மிஸ்டர் ரெட்டியார், பிற்பகல் எத்தனை மணிக்கு வகுப்புக்குப் போகின்றீர்?' என்று கேட்டார்; நான் பிற்பகல் 2-15க்கு என்றேன். மீண்டும் மணியனை நோக்கி, 'இன்று முற்பகலில் சேர்ந்ததாக ஆணையைத் தயார் செய்து, அவர் வகுப்பிற்குப் போவதற்கு முன்னர் அவர் க்ைக்குக் கிடைக்கச் செய்க" என்று கூறி முதல்வரைப் பார்த்து, முதலியார், இதற்கு முன்னுரிம்ை தந்து, கவனிக்கவும்' என்று கேட்டுக் கொண்டார். இப்படி நாடகப் பாங்கில் என் பதவி உயர்வு வந்தது. என் உள்ளத்தில் அந்தர்யாமியாக இருக்கும் ஏழுமலையப்பன்ே இவ்வாறு செய்வித்தான்' என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. .-....سه எனக்கு விரோதமாகச் சதி செய்த என் நண்பர் ஒருவர். இப்பதவி எனக்குக் கிடைக்காம்லிருக்க தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் பாங்கில் முயன்ற ச்ெய்லும்: அலெக்ஸ்ாண்டர் ஞானமுத்துவின் சாணக்கியமும். சாணக்கியத்திற்குப் பொருளாக இருந்த என் நண்பரின் மணமும், ஏனைய தோழ ஆசிரியர்களின் மனநிலையும், என்னை எவிய்ைப் பிடித்துக் கொல்லுவதைப்ப்ோல் என்னைப் பலி கிடாவாக்க முயன்றவரின் மன்மும், இதற்குப் பொறியாகச் செயற்பட்ட முதல்வரின் உள்ளமும் எப்படி எப்படியெல்லர்ம் சிந்தித்து மகிழ்ந்து (அல்லது துக்கித்து இருக்க வேண்டும் என்பத்ை வாசகர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக. சதியை விவரமாக எழுத என் கை மறுக்கின்றது; மனம் கூசுகின்றது. - மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் ஒருவருக்கும். இங்கு செய்யாத அடியேனைத் துன்பத்துக்குள்ளாக்க முயன்றவர்கட்கு ஆண்டவன் நல்வழி காட்டுவானாக