பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

టిక్షక్షీ நினைவுக் குமிழிகள்-3 போது கவனிக்கிறேன்' என்றார். உடனே பழைய நினைவுகள் படலம் படலமாக நினைவுக்கு வரத் தொடங்கின. நான் 1949 இல் தாங்கள் பொதுப் பணித் துறை ஆணையத்தின் தலைவராக இருந்தபோது (Chairman Madras Public Service Commission) பச்சையப்பன் கல்லூரியில் ஒரு Tutor வேலை வாங்கித் தருமாறு கேட்டேன். தாங்கள் நன்கு அறிந்த என் ஆசிரியப் பெருந்தகை திரு. K.இராமச்சந்திர அய்ய ருடன் தாங்கள் குடியிருந்த இல்லத்தில்தான் (ஆர்மஸ் சாலை, கீழ்ப்பாக்கம்) கேட்டேன். எம். ஏ. படிக்கவும், பிஎச்.டி.க்கு ஆய்வு செய்யவும் கொண்ட ஆசையால் தான் கேட்டேன். தந்தையின் பாசமுடன், இப்போது உணவு பங்கீட்டு முறை உள்ள காலம். வாங்கும் சம்பளம் போதாது. வீடும் சரியான இடத்தில் கிடைக்காது. இப்போது துறையூரில் பசுமாடுவைத்துக்கொண்டு சுகமாக இருக்கின்றீர்கள். சம்பளம் குறைவாக இருந்தாலும், உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகப் பெரும் புகழுடன் கெளரவமாக இருந்து கொண்டிருக்கின்றீர்கள். நாட்டுப்புற வாழ்க்கை உணவுப் பஞ்சத்தைப் பார்க்காத நிலை. இப்பொழுது இங்கு முயலவேண்டாம். அதற்குள் எம்.ஏ.யையும் முடித்து விடுங்கள்' என்று அறிவுரை பகர்ந்தார். - அதன்பிறகு - எம்.ஏ.யை முடித்துக் கொண்ட பிறகு1953 என்று நினைக்கின்றேன்-திரு. நாராயணசாமி பிள்ளையின் உதவியை நாடினேன். அப்போது நீங்கள் எம்.ஏ.படித்து விட்டால் மட்டிலும் போதாது. ஏதாவது ஒன்றிரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்ட அதுபவம் பெற்றிருந்தால் நலம். கிடைப்பது எளிதாக இருக்கும்' என்று அறிவுரை பகர்ந்தார். இதன் பிறகு நானும் திரு.வேங்கடாச்சாரியும் 1956-இல் பிஎச். டிக்குப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பம் அனுப்பினோம். கல்வி சம்பந்தமான தலைப்புகள்ை ஆய்வுப் பொருள்ாக்க்