பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலைத் தமிழில் பயிற்றல்-கருத்தரங்கம் 347 என்னைநன் றாக இறைவன் படைத்தனன் தன்னைநன்றாகத் தமிழ்செய்யு மாறே என்ற மூலன் மறைமொழியை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. திருப்பதில் நிலவிய தமிழை -பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங்கொண்டலின் திருவடி வாரத்திலேயே-வேரில் வெந்நீரை விட்டு அழித்த மாதிரி மொழி வெறியர்கள் கெட்டொழித்தனர். அதை என்னைக் கொண்டு தமிழை இறைவன் அங்கு மீண்டும் வளர்க்க நினைத்ததை யார் அறிவார்? தெய்விகத். திட்டத்தை (Divine design) மனிதன் புரிந்து கொள்ள முடியுமா? இதனால் துணைவேந்தர் பிள்ளை அவர்களின் எண்ணத்தை நிறைவேறாமல் செய்தான். தடுத்தாட் கொள்வதில் இறைவனைத் தவிர யாரால் முடியும்? சிறிது நேரத்தில் துணைவேந்தர் கீழிறங்கி அலுவலகத்திற்குப் புறப்பட்டார். வழக்கம்போல் தாம் அலுவலகத்தில் இறங்கிக் கொண்டு என்னைக் கருத்தரங்கு நடைபெறும் இடத்தில்கொண்டுபோய் இறக்கச் சொன்னார். பிறிதொரு சமயத்தில் ஒரு நாள் திரு. வீ. உலக ஊழியனாரைப்பற்றி எங்கள் பேச்சில் எழுந்தது. நான் துறையூரில் இருந்தபோதும் காரைக்குடிக்குச் சென்ற பிறகும் அவரை எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண் டேன் என்பதை விளக்கினேன். அப்போது அவர் சேலம் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தால் அவரும் சிறப்பார்; பல்கலைக் கழகத்தின் ஒளியும் நன்கு பிரகாசிக்கும் என்றேன். சில மாதங்களில் ஊழியனார். பல்கலைக் கழகத்திற்கு வந்து விட்டார். 2. திருமந்திரம்-பாயிரம்-81 (திருமூலர் வரலாறு)