பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.366 நினைவுக் குமிழிகள்-3 தந்தார். அக்காலத்தில் ஐரோப்பாவில் ஹிட்லர், முஸ்ஸோனி ஆகியவர்கள் சிம்மசொப்பனமாக இருந்தவர் கள். அப்போது (1935-36) ஜீவா சொன்ன வாசகத்தை அவரிடம் இப்போது (1958-59) நினைவு கூர்ந்தேன். இத்தாலி நாட்டு மக்களின் மார்பைப் பிளந்து இதயத்தை நோக்கினால் இத்தாலி-சுதந்திரம்' என்றி ருப்பதைக் காணலாம்; ஆனால் நம் தென்னிந்தியப் பர்ர்ப் பனர்களின் சட்டையை விலகிப் பார்த்தாலே டவாலி, (பூணுரல்)யைக் காணலாம் என்று கூறியது இன்னும் என் மனத்தில் பசுமையாக உள்ளது' என்று கூறியபோது ஜீவா மனம் நெகிழ்ந்து போனார். என்னுடைய நினைவாற்றலைப் பாராட்டினார். அக்காலத்தில் ஜீவா வும் நீலாவதி அம்மையாரும் பெரியார் தலைமையில் இயங்கிய சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கூட்டத்தில் முதல்வர் சாரநாதனே நன்றி கூறி சுயமரியாதைக் கொள்கைகளைப் பாராட்டிப் பேசின போது அவரது பரந்த நோக்கம் பளிச்சிட்டதைக் கண்டு மகிழ முடிந்தது. 口 口 ü 1952 முதல் அமிர்தவல்லி உணவு விடுதிக்கு முதல்வர் சீநிவாசன் அவர்கள் என்னைத் துணைப் பாதுகாவலராக (Deputy warden) நியமனம் செய்தார். துரைக்கண்ணு முதலியார் காலத்தில் 1957 வரை இப்பொறுப்பு என்னிடம் இருந்தது. இந்த விடுதி கல்லூரி வளாகத்தில் உடற் பயிற்சிக் கல்லூரி உணவு விடுதிக் கட்டடத்திற்கு மாற்றப் பட்ட பிறகு நான் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டேன். அதன் பிறகு உடற் பயிற்சி ஆசிரியர் திரு. ஒவன் பொறுப்பில் அது நடை பெற்றது. இதற்கு மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாய் மதிப்பூதியமாகத் (Honoratium) தந்ததாக நினைவு. இப்பொறுப்பினால் 40 மாணாக்கர்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களுடைய விருப்பு-வெறுப்புகள், உணர்ச்சிகள்,