பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 நினைவுக் குமிழிகள்-3 தோழர். இவர்தான் கூட்டத்திற்குத் தலைமை வகித்த தாக நினைவு. நான் கூட்டத்தில், முக்கணான் முதலி னோரை உலகொரு மூன்றி னோடும் புக்கபோர் எல்லாம் வென்று நின்றனன் புதல்வன் போலாம் மக்களில் ஒருவன் கொல்ல மாள்பவன்? வான மேரு உக்கிட அனுஒன்று ஓடி ン ご உதைத்தது போலும் அம்மா!' என்ற கம்பராமாயணப் பாடலில் தொடங்கி, அணுவின் அமைப்பு, கதிரியக்கம், கதிரியக்க ஐசோடோபுகள், அவை உயிரியல், மருத்துவம், உழவுத்தொழில் தொழில் துறை, எதிர் காலத்தில் அணுவாற்றல் பயன்படும்முறைகள் இவற்றை விளக்கித் தாருகவனத்து முனிவர்கள் இயற்றிய அபிசார யாகம், அதிணின்றும் வெளிவந்த தீய சக்திகளை சிவபெருமான் பயனுள்ள வகைகளில் பயன்படுத்திய முறை-இவற்றோடு பேச்சை முடித்தேன். அன்றைய பேச்சு பயனுள்ள முறையில் அமைந்ததாக அனைவரும் ஒருமுகமாகப் பாராட்டினர். மாலை (இரவு) 8-மணிக்கு, இல்லம் வந்து சேர்ந்தேன், . 枋 C ロ சொ. முருகப்பா ஒரு சிறந்த இலக்கியச் சுவைஞர். பலதடவை அவரை மகளிர்இல்லத்தில் (அமராவதி புதுர்) - சந்தித்திருக்கின்றேன். ஏதோ பொது விஷயங்களைப் பேசி னாலும் அவர் பேச்சு இலக்கியத்திற்கு இழுத்துச் சென்று விடும். பல சமயங்களில் பல பாடல்களைச் சொல்லி விளக்கியுள்ளார்கள். அவற்றுள் ஒரு பாடல் அழகர் கலம் பகத்தில் ஆள்ளது. . - . புத்த்கள். இராவணன்சோகம்-52