பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் நெல்லை நிகழ்ச்சிகள் 387 கவிதையே பறந்து ஓடி விடும் போலிருக்கின்றது' என்று கூறி ஒத்து ஊதினார்; ஆதிதாளமும் போட்டார். ஆதிதாளம் என்பது, சங்கீதத் துறையில் ஒருவகையாகத் தாளங்களைத் தட்டுவது. இஃது எல்லாப் பாட்டுக்கும் பொருந்தும் என்று என் சங்கீத நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இப்படியாக இரு பெரியார்களும் என் நூலைப் பற்றித் திறனாயவே, பல்லாண்டுகள் முயன்று, சிந்தித்து, ஒரு வகையாக முடிவுக்கு வந்த முடிவைத் தகர்க்கின்றனரே என்று உணர்ச்சிவயமானேன். மெதுவாக, நாசூக்காக, இருவர் உள்ளத்திலும் படட்டுமே என்று பேசத் தொடங் கினேன். ஐயன்மீர், நான் சொல்வதைச் சற்றுச் செவி சாய்த்துக் கேளுங்கள், ஒவல்டின் என்ற பானத்தைப் படித் தவர்கள், படிக்காதவர்கள், அறிவியல் அறிஞர்கள், உணவு நிபுணர்கள் இவர்கள் யாவரும் மகிழ்ந்து பருகு கின்றனர். அதன் சுவையில் ஆழங்கால் படுகின்றனர். உணவு நிபுணர்கட்கு அதில் கோக்கோ, மால்ட், விட்டமின் கள் முதலிய சத்துகள் அடங்கியிருப்பது நன்கு தெரிவும். இவர்களுள் சிலர் ஒவல்டின்னைப் பற்றிப் பகுப்பாய்வில் நோக்கிச் சுவைக்கின்றனர். நாம்போலியர் எதையும் சிந்தி யாமல் சுவைக்கின்றோம். இவர்கள் இருசாராரின் சுவை யிலும் வேறுபாடுகள் காண முடியுமா? (2) சிற்றின்பத்திற்கு வருவோம். மருத்துவர்கள், உடலியல் வல்லுநர்கள், சாதாரணமானவர்கள் எல்லோ ருமே அறிதோறும் அறியாமை கண்டற்றால் போல்’ இன்பச்சுவையில் ஆழங்கால் படுகின்றனர். இன்னும் சில பெருங்குடியர்களும் இச்சுவையுடன் ஈடுபடுகின்றனர். உடலியல் வல்லுநர்களும் இச்சுவையில் பங்கு கொள்ளும், உடலுறுப்புகள். இதில் சுரக்கும் நீர்வகைகள் முதலியவற் றையும் உடலுறுப்புகள் செயற்படும் முறை - # திது;