பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 நினைவுக் குமிழிகள்-; இப்போது பழைய நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக என் மனத்தில் எழத் தொடங்கின. சிறுவனாக இருந்து போது நான் பெரகம்பியில் என் அம்மான் வீட்டில் வளர்ந்த வரலாறுவெளிப்பட்டது. மூன்றாண்டுப் பருவத் திலேயே என் தந்தையை இழந்த எனக்கு என்அம்மான் வீடேபுகலிடம். அப்போது அவர் ஒரு மகவுடன் தன் முதல் மனைவியைத் தள்ளி வைத்திருந்த நிலை. ଘtst அன்னையார் கோட்டாத்துாரிலும் பெரகம்பியிலும் இருந்து கொண்டிருந்த நிலை. நிலம் குத்தகைக்கு விடப் பெற்றிருந்தது புன்செய் நிலம் சொந்தப் பண்ணையாக இருந்தது. இரண்டாவது திருமணத்திற்கு முன்பு (1925): என்னைத் தன் மகன்போல் கவனித்து வந்தார் என்று சொல்வதைவிடத் தன் மகனாகவேகொண்டு வளர்த்தார். அளவுக்கு மீறிய செல்லம் தந்தார்கள். இரண்டு மா மரங்களின் பழத்தை விருப்பப்படி தின்னும் வாய்ப்பு; செட்டிக் குளத்திலிருந்து ஒரு மாது பிஸ்கட்டுகள் கொண்டு வந்து விற்பாள்; கொய்யாப் பழம், அன்னாசிப் பழம் ஆரஞ்சுப் பழம் கொண்டு வருவாள். இவற்றையெல்லாம். என் பொருட்டே வாங்கித் தள்ளுவார்கள். இவை யெல்லாம் என் பாட்டியின் அன்பு வெள்ளமாக என்மீது பாயும். . ... " ' . * ア、 வீட்டில் இரண்டு பசு மாடுகள்; ஒன்று வெள்ளைப் பசு, மற்றொன்று காராம் பசு. காலை 7.30க்கு என் அம்மான்தான் இரண்டு மாடுகளிலும் பால் கறப்பார். என் பாட்டி ஒரு டம்ளரில் சீனி சருக்கரைஅல்லது நாட்டுச் சருக்கரை சிறிதளவு போட்டு அதை என் கையில் தருவார். என் அம்மான் அதை என்னிடமிருந்து வாங்கி அந்த டம்ளரிலேயே பால் பீச்சி என்னிடம் பருகத் தருவார்; பால் இளஞ்சூட்டுடன் இனிக்கும். இரவிலும் பாட்டியால் தருவார்கள். . . . . . . என் அம்மானின் இரண்டாந் திருமணத்திற்குப் பிறகு, என் பாட்டி தம் இரண்டாம்'மருமகளுடன் ஒவ்ாழ விரும்ப