பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கோபிப் பயணம் 463 கரைத்துக் கொண்டே வந்தது. ஆனால் என் மனைவியின் துக்கம் குறையவில்லை. மாமியார்-மருமகள் ஒற்றுமை பிறருக்கு எடுத்துக் காட்டாக இருந்தது என்று சொல்ல லாம்; பிறர் பொறாமைப்படக் கூடியதாகவும் இருந்தது. அதனால் என்னை ஒருநாள்கூட பிரிந்திருக்க என் மனைவி அனுமதிப்பதில்லை. மாலை நேரத்தில் 7-30க்கு மேல் தாமதமானால் கூட கண்டிப்பு இருந்தது. இந்த நிலையில் 4 நாட்கள் கோபிச்செட்டிபாளையத் தில் அறிஞர்கள் கூடி கம்பராமாயணத்தில் ஓர் ஆய்வு நடத்தத் தீர்மானித்தனர். மர்ரே கம்பெனி எஸ். ராஜம் அங்குச் சில அறிஞர்களுடன் வருவதாகக் கூறி, முருகப்பா கம்பராமாயண ஆராய்ச்சியில் இரண்டாண்டுகட்கு மேல் பங்கு கொண்ட என்னையும் பூ அமிர்தலிங்கத்தையும் க. தேசிகனையும் வருமாறு பணித்தார் கம்பனடிப்பொடி. ஏதோ காரணத்தால் தேசிகன் வரவில்லை. பூ. அமிர்த விங்கம் மட்டிலும் வந்தார். நான் என் மனைவியைச் சமாதானம் செய்து கிளம்புவது போதும் போதும் என்றாய் விட்டது. அழவே ஆரம்பித்து விட்டாள். சா. க; வுக்காக அவசியம் போக வேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ஒரு நாள் நாங்கள் மூவரும் திருச்சி சென்று அங்கிருந்து ஈரோடு வண்டியைப் பிடித்து அதிகாவை ஐந்து மணிக்கு ஈரோட்டை அடைந்தோம். மர்ரே ராஜம் தம் சகாக் களுடன் வந்து சேர்ந்தார். திரு.கு.அருணாசலக் கவுண்டர் இரண்டு கார்களுடன் இருப்பூர்தி நிலையத்திற்கு வந்து எங்கட்காகக் காத்துக் கொண்டிருந்தார். w காலை 7-மணிக்கு எங்களைக் கார்களில் கோபிச் செட்டிப்பாளையம் கொண்டு போய்ச் ே ார். கோபிச் செட்டிப்பாளையத்தில் சுப்பிரமணியக்க இல்லத்தில் நாங்கள் அனைவரும் விருந்தினர்க: இருந்தோம். நல்ல இடிம் சுமார் நான்குனுத்