பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/435

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்குடியில் பதவி விலகல் 垒罩球” திருவருள் இதற்கு உதவும் என்ற நம்பிக்கையே எனக்கு: ஒருவித உந்துவிசையை நல்கியது. ஒரு சமயம் சிறந்த வழக்கறிஞரும் வடமொழி அறிஞரும் பேராசிரியர் திருவேங்கடாசாரியாரின் திருத் தந்தையாருமான திரு. சுந்தராச்சாரியார் காரைக் குடிக்கு வருகை புரிந்து சில நாட்கள் தங்கியிருந்தார். இரண்டு மூன்று தடவை அவரைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தேன். இந்தச் சந்திப்புகளில் அவர் என் திறமை, நோக்கம், ஆய்வு மனப்பான்மை, ஆய்வில் பேரவா-இவற்றையெல்லாம் அளந்து விட்டார். ஒரு நாள் சொன்னார்; நீங்கள் பல்கலைக்கழக வாழ்க்கையை விரும்புகின்றீர்கள்; என் மகன் கல்லூரியில் முதல்வராக வர விரும்புகின்றான். வேங்கடவன் அருளால் உங்கள் விருப் பங்கள் நிறைவேறும்’ என்றார். இந்த வாழ்த்து உபநிடத முனிவர் வாக்கியம்போல் பலன் அளித்தது. நான் 1960ஆகஸ்டு முதல் திருப்பதிப் பல்கலைக் கழகத்தில் பணியில் அமர்ந்தேன். திருவேங்கடாச்சாரி 1967-முதல் காரைக் குடியிலேயே முதல்வராக உயர்ந்தார். நாங்கள் இருவரும் மானிடர் எவர் உதவியுமின்றி இறையருளின் துணை கொண்டு எங்கள் உழைப்பினால் உயர்ந்தோம். ஆனால் என் உயர்வில் ஏழுமலையான் என்னைக் க்சக்கிப்: பிழிந்ததை யார் அறிவார்? எனக்குப் பதவி வந்ததைக் கண்டு அதிகமாக" மகிழ்ந்தவர் திருவேங்கடாச்சாரிதான். ஆணை வந்த, அன்று அப்படியே என்னைக் கட்டித் தழுவிக் கொண்டார். ஏனைய ஆசிரியர்கள் கைகுலுக்கினதோடு சரி. முதல்வர் முதலியாரும் உண்மையான மகிழ்ச்சி தெரிவித்தார்: o மாணாகர்கள் பெருமகிழ்வு எய்தினர். சென்னை மயில்ை மாமுனிவர் பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜுலு" ரெட்டியாரிடமிருந்து வாழ்த்துச் செய்தி வந்த o வுக்கு நான் காரைக் குடியை விட்டுப் போதில் விருப்ப இல்லை.பி.எச்.டி. பட்டம் பெறுவதில் என் பேசவிை