பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு 41 எல்லோருமே நன்கு அறிவர். சா. கணேசனும் தம்பியின் இல்லத்திற்கும் அடிக்கடி வந்து போவதுண்டு; இவர் போகாவிட்டாலும் வாகனத்தை அனுப்பியாவது வருவிப் பார் தம்பி. ஆனால் இந்தச் சந்திப்புகள் யாவும் கல்லூரி யின் மேம்பாடு பற்றியும், மாணவர்களின் முன்னேற்றம் பற்றியவுமாகவே இருக்கும். ஆனால், மேனன் அளவோடு பழகுபவர்; கல்லூரியிலும் பிரச்சினைகள் அதிகமாக எழுவதில்லை. இதனாலும், மாலை மூன்று, மூன்றரைக்கு மேல் அவர்கள் கல்லூரியில் தங்கும் வழக்கத்தை மேற் கொண்டிராததால் மேனன், மிஸ்டர் திருவேங்கடாச்சாரி கல்லூரி நடைமுறையைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று சொல்லிவிட்டு இல்லம் திரும்பிவிடுவார். கிட்டத் தட்ட கல்லூரியில் வேலையும் ஒன்றிராது. தமக்குரிய வகுப்பு வேலையையும் முற்பகலிலேயே முடித்துக் கொள் வார். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்’ என்பதுபோல சா. கணேசன் தம்பிமேல் வைத்திருந்த பற்றையும் பாசத்தையும்போல் மேனன் மேல் வைக்க வில்லை என்பதை நான் நன்கு அறிவேன். சா. கனேசனை அடிக்கடிச் சந்திக்கும் என்னிடம் தம்பியின் நிர்வாகத்தை யும் அவர் கல்லூரிபால் கொண்டுள்ள தனி அக்கறையையும் அடிக்கடிப் புகழ்ந்து பேசுவார். அதுபோல மேனனைப் பற்றிப் பேச்சே எழுவதில்லை. ஆயினும், மேனனைப் பற்றிக் குறைத்துப் பேசுவதில்லை. ஒரு சமயம், மேனன் மூன்று , மூன்றரை மணிக்கே வீட்டிற்குப் போய் விடுகின்றாராமே என்று மட்டிலும் சொன்னதாக நினைவு. நான் அவர் கடமைகளை ஒரு நாளும் புறக்கணிக்க மாட்டார். சின்னக் கல்லுரரி; அதுவும்ஆசிரியப் பணிக்குப் பயிற்சி பெறும் ஆசிரியர்களால் பிரச்சினை ஒன்றும் இராது. அவருடைய முன்னைய வாழ்வில் {மாநிலக் கல்லூரி, சென்னை) மாலையில் மூன்று. மூன்றரைக்கு மேல் கல்லூரில் த்ங்குவதில்லை போலும். அதனால்தான் பெரும்பாலும் கல்லூரியில் பொறுப்பான