பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 நினைவுக் குமிழிகள்-3 சிற்றுண்டி முடித்துக் கொண்டு வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு காலையில் கோட்டாத்துTர் சென்றோம். குணம் நல்லப்ப ரெட்டியாருக்கு முன்னரே அறிவித்துச் சென்றோம். நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலம் முதல் அவர் மறையும்வரை அன்புடனும் பாசத்துடனும் பழகி வந்தவர். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுத் (பெரும் பாலும் நீரடைப்பு) துன்புறுவர். பல்வேறு பழவகைகளை வாங்கிக் கொண்டு சென்றிருந்தோம். நல்லப்பு ரெட்டியார் வீட்டில் பகல் விருந்து மாலையிலும் சிற்றுண்டியும் அங்குத்தான் கொண்டோம். மாலை ஐந்து மணிக்குக் கோட்டாத்துாரிலிருந்து புறப்பட்டு ஆறு மணிக்கு எதுLü 6Ꮘ}Ꮆü ☾ö II f அடைந்தோம். தியாகராச ரெட்டியார் (என் தங்கையின் மகள் வீடு) வீட்டில் தங்கி இரவு சிற்றுண்டிக்குப் பிறகு கோயிலுக்குச் சென்றோம். நள்ளிரவு 3 மணிக்கு முடி இறக்கிக் குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டினோம். 3-30 மணிப் பூசை முடிந்தது. அதிகாலை 4 மணிக்கு கார் அனுப்பி தியாகராச ரெட்டியார் வீட்டிலிருந்து குழந்தைக்குப் பால், எங்கட்குக் காஃபி தருவித்துக் கொண்டோம். ஆறு மணிக்குப் புறப்பட்டுத் தியாகராச ரெட்டியாரிடம் விடைபெற்றுக் கொண்டு 7-30க்குத் திருச்சியை அடைந்தோம். எங்களுடன் என் சம்பந்தி குப்புசாமி ரெட்டியாரும் வந்திருந்தார். . R. பாலகிருஷ்ணன் (ஜமால் முகமது கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்) தில்லை நகருக்கருகில் ஓர் உணவு விடுதியில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அவர் வீட்டிற்கு விருந்து உண்ண அழைத்தார்.கோயிலுக்குப் போனவர்கள் நேராக வீடு போக வேண்டும். பிறர் வீடு போகக் கூடாது என்ற மரபுப்படி நான், என் மனைவி, என் சம்பந்தி குப்புசாமி ரெட்டியார் மட்டிலும் அவர் வீடு சென்று உண்டோம். என் மகன், மருமகள், பேத்தி இவர்கட்கு விருந்துணவை விடுதிக்கு அனுப்பிவிட்டார். காலைச்