பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. டி. கே. சி. பாட பேதங்கள் திமிழகத்தில் எந்த நூலை எடுத்தாலும் பாடபேதங்' களுக்குக் குறைவில்லை. வை. மு. கோ. கம்பராமாயணத் தில் ஒவ்வொரு பாடலின் கீழும் பாடபேதங்கள் காட்டப் பெற்றுள்ளன. பாடலின் கீழ் பிரதிபேதம்’ (பி-ம்) என்று போடப் பெற்றிருப்பதைக் காணலாம். மர்ரே கம்பெனி ராஜத்தின் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பதிப்பில் ஒவ். வோர் ஆயிரத்தின் இறுதியிலும் பிற்சேர்க்கையாக பாட ரூபபேதங்கள் என்ற தலைப்பில் பெரிய பட்டியல் தரப் பெற்றிருப்பதைக் காணலாம். பெரும்பாலும் தமிழ்நூல் பதிப்பில் இந்தப் பாட வேற்றுமைகள் ஒரு பொது அம்ச மாக அமைந்து விட்டன. அச்சுப் பொறி இல்லாத காலத்தில் மக்கள் பலர் பாடல்களைப் பாடியும் ஏடுகளில் எழுதியும் வந்தார்கள். பாடியவர்களும் எழுதியவர்களும் சிலர் புலவர்களாக இருந்திருக்க முடியாது. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்; படித்தவன் பாட்டைக் கெடுத் தான்’ என்ற பழமொழியே பாடவேற்றுமைகள் ஏற். பட்டதன் காரணத்தை விளக்குவதாகும். - துறையூரில் நான் இருந்தபோது என் அரிய நண்பர் திரு. முத்துவேல் பிள்ளை காரைக்குடிக் கம்பன் திருநாளுக் குப் போவதற்கு ஆற்றுப்படுத்தியபோது டி.கே.சி. அவர் களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்த நாள் முதல் அவர்மீது தனிப்பட்ட மரியாதையும் அன்பும் கொண்டு விட்டேன். இந்தத் தாடியில்லாத் தாகூர்’ (கவிமணி வாக்கு) என மனத்தில் நிலையான இடம் பெற்று விட்டார். அவரை அடிக்கடி பார்த்துப் பழகும் வாய்ப்பு இராவிட்டாலும் அவர் நூல்களைப் படிக்கும். பழக்கமுடையவனானேன். டி.கே.சி.யின் கம்ப ராமாயணத் திருத்தங்கள்’ என் கவனத்திற்கு வந்தன. அவர் பதிப்பித்த இராமாயணப் பதிப்புகளைப் பார்த் தேன்; படித்தேன். கம்பர் காவியம், கம்பர் வாழ்ந்த