பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் தானியேல் தேவசங்கீதம் எம்.ஏ. பி.எச்.டி, பட்டயம் மொழியியல் தமிழ்ப் பேராசிரியர். தமிழ்த்துறை திருவேங்கடவன் பல்கலைக் கழகம் திருப்பதி-517502 (ஆ.மா) அணிந்துரை பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் அவர்கள் ஒரு விந்தை மனிதர்; துணிவையே துணையாகக் கொண்டவர்; உழைப்பால் உயர்ந்த செம்மல்; அதுமனைப்போல் ஆற்றலும் அடக்கமும் ஒருங்கே கொண்டவர். பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் 1980 இல் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1977-இல் பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். திருப்பதியில் வாழ்ந்த பதினேழு ஆண்டுகளில் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் நினைவுக் குமிழிகள்’’-4 என்னும் நூலாக மலர்ந்திருக்கின்றது. இந்நூலுக்கு அணிந்துரை எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை; என் மீது அவர் வைத்திருக்கும் அன்பு ஒன்றே இதற்குக் காரணம். சற்றேறக் குறைய இருபத்தைந்து ஆண்டுகளாகப் பேராசிரியர் ரெட்டியார் அவர்களோடு நெருங்கிப் பழகியவன் நான். கிறித்துவப் பாதிரிமார் இயேசுவின் அன்பை உலகெங்கும் சொல்ல தம் உடல். பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து இந்திய மண்ணிற்கு