பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£8 நினைவுக் குமிழிகள்-4 அவள் நோக்குகின்றாள்; ஆள் அடையாளம் தெரிய வில்லை. அவனுடைய மணி முடி மட்டிலும் அவளுடைய கண்ணில் படுகின்றது; அதனையே நோக்கிய வண்ணம் இருக்கின்றாள்; தேரும் அவளது வீட்டருகில் வருகின்றது: உள்ளே தென்னவன் வீற்றிருக்கின்றான். அவனுடைய மார்பில் மலர் மாலைகள் கிடந்து புரளும் காட்சி அவளது கண்ணில் படுகின்றது. தேர் வீட்டிற்கு நேரே வந்து நின்ற வுடன் மாறனுடைய மார்பில் கிடக்கும் முத்தாரங்கள் மிளிர்வது தெரிகின்றது. சிறிது நேரத்தில் தேரும் போய் விடுகின்றது. அன்று கண்ட காட்சி அந்நங்கையின் மனத்தைவிட்டு அகலவே இல்லை. மாறன்பால் மால் கொண்டு மயங்கிய வண்ணம் இருக்கின்றாள் அவள். சரியாக உண்பதுமில்லை; உறங்குவதுமில்லை. இந்நிலையை அவளுடைய அன்னை அறிந்து தன் மகள் வெளியே எட்டிப் பார்க்காத வண்ணம் காவல் புரியத் தொடங்கு கின்றாள். பாவம், அந்நங்கை என்ன செய்வாள்? ஒரிடத் தில் அமர்ந்து கொண்டு அவள் ஏதேதோ எண்ணுகின்றாள்; சிந்தனையில் ஆழ்கின்றாள். அப்பொழுது அண்டை வீட்டி லுள்ள நங்கைமார் சுண்ணம் இடிக்கும் ஒலியும், அவர்கள் பாடும் வள்ளைப் பாட்டொலியும் அவளது காதில் விழுகின்றன. உடனே தான் காதலிக்கும் பாண்டியனைப் பற்றிப் பாடிக் கொண்டு சுண்ணம் இடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகின்றது. ஆனால், தனது இயலாத நிலையை எண்ணித் தன் நெஞ்சுடன் இவ்வாறு சொல்லிக் கொள்ளுகின்றாள். தலைநாளில் கண்ட காட்சியை தினைந்து பேசுகின்றாள். நான் முதலில் கண்டது கொடி, அடுத்துத் தேரைக் கண்டேன். அதன் பிறகு தேரினுள் வீற்றிருப்பவன் மாறன் என்றும் அவன் அணிந்திருப்பது குளிர்ந்த மலர் மாலை பென்றும் அறிந்தேன். சிறிது நேரத்தில் மாறனின் மணி