பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிர விளக்கம்-முகிழ்த்தல் Ꮾ 9 முடியும், மார்பில் இலங்கும் முத்தாரமும், எனது கண்ணில் பட்டன". இங்ங்னம் யான் கண்ட காட்சியை முறை சிறிதும் பிறழாமல் உலக்கையை ஒச்சும்போது வள்ளைப் பாட்டால் பாடும் பேறு என்றாவது பெறுவேனோ? கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை ...ஒச்சப் பெறுவனோ என்று எண்ணுகின்றாள். பெரிய இல்லமாக இருந்தால் அன்னை அக்கம் பக்கம் போயிருக்கும் பொழுது பாட்டினைப் பாடி உலக்கையைப் போடலாம்; அதற்கும் வழி இல்லையே. ஆனால், என் வீடோ மிகவும் சிறியது. அன்றியும், அண்டை வீட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் உண்டு; அவர்கள் திருமணமானவர்களாதலின் அவர்கட்கு யாதொரு கட்டுப்பாடும் இல்லை. அன்னை எங்காவது போய்த் தொலைவாள் என்று பார்த்தால், அதற்கும் வழி இல்லை. என்னை விடாது கட்டிக் காக்கின்றாள் அவள். -தொடியுலக்கை கைமனையில் ஒச்சப் பெறுவனோ யானும்ஒர் அம்மனைக் காவல் உளேன்’ ’ என்று ஏங்குகின்றாள். 2. "வற்கலையின் உடையானை' (கம்ப, அயோ. கு கப்-29) என்ற பாடலுடன் ஒப்பிடுக. இது தொலைவில் வந்து கொண்டிருக்கும் பரதனைக் குகன் கண்ட முறையினை விளக்குவது'