பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7鲁 நினைவு குமிழிகள்-சி தலைவியின் ஏக்கம் அவளது மனத்தில் தோன்றிய படியே அமையுமாறு கவிஞர் அமைத்த சொல்லோவியம் இது: கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டார் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை கைம்மனையில் ஒச்சப் பெறுவெனோ யானும் ஓர் அம்மனைக் காவல் உளேன்." இது கைக்கிளை தலைவி நெஞ்சோடு கூறுவது. விளக்கம் : கொடி-மீணக்கொடி. கொய் தண்தார் மாறன் - அப்பொழுது பறித்துக் கட்டிய குளிர்ந்த மாலையைச் சூடிய பாண்டியனது. முடி-கிரீடம். முத்தாரம்-முத்துமாலை; பாண்டியனுக்குச் சிறப்பா யுள்ளது. தொடி-பூண் (இங்குத் தங்கப் பூண்). தொடி உலக்கை-பூண் கட்டிய உலக்கை. கை மனை-சிறிய வீடு. கை-சிறுமை; கைக்குடை, கைத்தடி, கையேடு, கை விளக்கு முதலியன காண்க. ஒச்சுதல்-சுண்ணம் இடிக்கும் பொழுது உலக்கையை மேலோங்கிச் செல்லும்படி நீட்டுதல். யானும்-இதில் உள்ள உம்மை இறந்தது. தழிஇயது. அண்டை வீட்டுப் பெண்கள் யாவரும் பாடிச் சுண்ணம் இடிக்கின்றனரே, யானும் அ ப் பே று. பெறுவேனோ என்பதை அந்த உம்மை குறிப்பிடுகின்றது. யானும் என்பதற்கு அபாக்கியவதியாகிய யானும் என்றாலும் பொருந்தும். அம்மனை-தாய் ஓர் அம்மனை (கதவடைத்துக் காப்பதில்) ஒப்பற்ற தாய்; ஒர்கின்ற அம்மனை எனக்கொண்டு, குற்றம் ஆராய்கின்ற தாய் எனலும் அமையும். 3. முத்தொள்ளாயிர விளக்கம்-44.