பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தொள்ளாயிர விளக்கம்-முகிழ்த்தல் 71 இந்தப் பாடலில் பாடி' என்ற சொல் பலமுறை வந்து பாடலின் உணர்ச்சியை மிகுவிக்கின்றது.* "ஓர் அம்மனைக் காவலுளேன்’ என்ற இறுதியடியில் நங்கையின் ஏக்கத் துடிப்பு தொனிக்கின்றது. இந்த அடியைத் திரும்பத் திரும்பப் பாடி அநுபவித்தால் அத்துடிப்பு வெளிப்படுவதை அறிந்து மகிழலாம். குமிழி- 65 9. பிஎச். டி ஆய்வுக்கு இசைவு தர மறுப்பு ിക്കു போகாமல் இருப்பேனோ-இந்த சென்மத்தை வீணாகக் கழிப்பேனோ? என்ற ஏக்கம் கொண்ட நந்தனாரைப் போல் என்று நான் டாக்டர் (பிஎச்.டி) பட்டம் பெறுவேன்?' என்று ஏங்கிக் கிடந்தேன். 1943இல் தொடங்கிய இந்த ஏக்கம் தொடர்ந்து என்னை வாட்டத் தொடங்கியது. 'ஊழிற் பெருவலியாவுள' என்ற வள்ளுவர் வாக்கு என் எண்ண அலைகளின் மீது மேலோங்கி நின்றது. சென்னைப் பல்கலைக் கழக விதி.என் தலைவிதி"யாக நின்று தடுத்தது. புகல் ஒன்று இல்லா அடியேன்உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே' 4. காதார் குழையாட' (திருவா. திருவெம்’ 4) என்ற திருவெம்பாவைப் பாடலில் ஆட', 'பாடி’ என்ற சொற்கள் மீட்டும் மீட்டும் இவ்வாறு வந்து உணர்ச்சியை மிகுதிப் படுத்துவதைக் காண்க, f • திருவாய். 6.10.10.