பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 நினைவு குமிழிகள்-4 என்ற நம்மாழ்வாரின் திருவாக்கினைச் சிரமேற்கொண்டு தமிழகத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியர்-துறைத் தலைவர் பதவியைத் துறந்து திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பதவியை ஏற்றேன் - 1950 ஆகஸ்டு முதல் நாள். பல்கலைக் கழகத்தில் தத்துவத்துறையில் மிக்க புகழோடு விளங்கியவர் டாக்டர் கே. சி. வரதாச்சாரியார்; இவர் துணைப் பேராசிரியராக இருந்தார். இவர் திருப்பதி வாசி முதல்வர் டி. ஏ. புருஷோத்தம்தான் இத்துறைப் பேராசிரியர், துறைத் தலைவர். இத் துறையில் மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர் டி. இ. வீரராகவன் என்ற விரிவுரையாளர். எப்படியோ பணியில் சேர்ந்த சில நாட்களுக்குள் இத் துறைக்குப் போக நேர்ந்தது. புதிதாக வந்தவனாதலால் தமிழ் பேசத் தெரிந்தவர்களிடம் பழக வேண்டும் என்ற எண்ணம் முகிழ்த்ததால் இந்தத் துறைக்குச் சென்றேன். டாக்டர் கே. சி வரதாச்சாரியாரும் டி. இ. வீரராகவனும் திருப்பதி தேவஸ்தானத்தைச் சார்ந்த கலைக் கல்லூரியில் பல்லாண்டுகள் பணியாற்றியவர்கள்; பல்கலைக் கழகம் நிறுவப் பெற்றதும் பல்கலைக் கழகத்தில் வந்து சேர்ந்தவர்கள். இதனால் திருப்பதியின் கல்விச் சூழ்நிலை, பணியாற்றிய பெரியார்கள், பிற விவரங்கள் இவற்றை நன்கு அறிந்தவர்களாக இருந்தனர். டாக்டர் கே.சி. வரதாச்சாரியர் நன்கு படித்தவர். அவர் பேச்சிலிருந்தே பெரும்புலவர் என்பதைச் சிறிது நேரத்தில் எவரும் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். டி.இ. வீரராகவன் நாட்டு நடப்புகளை நன்கு அறிந்தவர்; உலகியலை நன்கு புரிந்து கொண்டுத் திகழ்ந்தவர். இதனால் இத்துறைக்கு அடிக்கடிப் போய் வருவதுண்டு.