பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஎச். டி ஆய்வுக்கு இசைவு தர மறுப்பு 73 நான் பிஎச்.டி. பட்டத்திற்குப் பதிவு செய்து கொள்வதற் காகவே இங்கு வந்ததாகக் குறிப்பிட்டேன். இதைப் பற்றி டாக்டர் கே.சி, வரதாச்சாரியாரிடம் அடிக்கடிப் பேசுவதுண்டு. தலைப்பைத் தேர்ந்தெடுத்தல், அணுகும் முறை இவற்றைப் பற்றி அவரிடம் கலந்து ஆலோசிப்ப துண்டு. ஒரு நாள் அவரை எனக்கு வழிகாட்டியாக (Guide) இருக்குமாறு வேண்டினேன். என்னுடைய துடிப்பு. ஆய்வில் ஆர்வம், கடுமையான உழைப்பு இவற்றை நன்கு அறிந்து தெளிந்த .ே ய ர சி ரி ய ர் என் வேண்டுகோளுக்கு ஒப்புக் கொண்டார். ஒரு நன்னாளில் விண்ணப்பத்தை நிரப்பி, உரிய கட்டணத்தைச் செலுத்தி பேராசிரியரிடம் ஒப்பம் வாங்கிப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பினேன். அனுப்பிய பிறகு துணைவேந்தரையும் சந்தித்து இசைவு தருமாறு வேண்டினேன். அவரும் கவனிப்பதாகக் கூறினார். ஆனால் அவா சொன்னது: மிஸ்டர் ரெட்டியார், நன்றாக ஆய்வு செய்யுங்கள். கட்டுரையை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்ற எண்ணமுடையவராக இருங்கள். எதிர்காலத்தில் இங்குத் தமிழ்த் துறை ஏற்பட்டு வளர வாய்ப்புண்டு தாங்கள் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவு' வருவதற்கும் வாய்ப்பு இருக்கும். அப்போது தாங்கள் வழிகாட்டியதாக இருக்க நேரிடுங்கால், இருவர் அல்லது மூவருக்கு மேல் எடுத்துக் கொள்ளாதீர்கள். அவர் களையும் ஆங்கிலத்தில்தான் கட்டுரை வரையப் பெறல் வேண்டும் என்று வற்புறுத்துங்கள். எக்காரணத்தைக் கொண்டும் தமிழில் எழுத இடங்கொடுக்காதீர்கள். இந்த நிலையில் கூட தமிழைப் பற்றி ஆங்கிலத்தில் வடிக்க முடியாது என்றால், யார்தான் தமிழைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்போகிறார்கள்? மொழியாசிரியர்கள் நல்ல ஆங்கில அறிவுடன் திகழ்ந்தால் அவர்கட்கு உலகளாவிய புகழ் கிடைக்கும். ஏன்? இந்தியாவிலேயே எல்லாப் பகுதிகட்குப் போகவும் அங்கெல்லாம் தமிழ்