பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7叙 நினைவு குமிழிகள்-4 இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழில் பக்தி இலக்கியத் தின் பெருமை, தமிழ் இலக்கியம் பல்வேறு காலங்களில் பல்வேறு சூழ்நிலையில் வளர்ச்சி பெற்ற முறை இவற்றை யெல்லாம் நம் நாட்டில் பிற பகுதியினரும் வெளி நாட்டாரும் அறிய வாய்ப்புகள் ஏற்படும்' என்று issoul] & # 9 slogator (Sermon on the Mount) Gustairp ஒர் அறவுரையை நல்கினார். இது கண்ணன் பார்த்த னுக்குத் தேர்த்தட்டிலிருந்துகொண்டு உபதேசித்த கீதையைப் போன்றிருந்தது என்றும் சொல்லிவைக்கலாம். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். எதிர்காலத். தில் அமைய இருக்கும் தமிழ்த்துறையை எவ்வெவ்வாறெல் லாம் வளர்க்கவேண்டும்? அதன்வளர்ச்சிக்கு எப்படி உழைக்க. வேண்டும்? எப்படிப் புகழ் பெறச் செய்யவேண்டும்? என்றெல்லாம் என் மனம் சிந்திக்கத் தொடங்கியது; கற்பனையுலகில் என் மனம் சிறகடித்துப் பறக்கத் தொடங் கியது. பைந்தமிழ்ப் பின்சென்றபச்சைப்பசுங் கொண்டல்' ஏழுமலையான் துணையின்றி-அவன் திருவருளின்றிதமிழ் நடையாடிக் கொண்டிருந்த நிலப்பகுதியில்-நடை யாடாமல் செய்து வந்த சூழ்நிலையில்-எதுவும் நடைபெற. முடியாது என்பது என் அதிராத நம்பிக்கையாக இருந்தது. சில நாட்கள் கழிந்தன. பிஎச்.டி. ஆய்வு செய்ய இசைவு மறுக்கப்பெற்றது. காரணம் அறிவதற்காகத் துணைவேந்தரைச் சந்தித்தேன், தமிழ்ப் புலம் (Tamil Faculty) பல்கலைக் கழகத்தில் இல்லாததால் ஆய்வு செய்வதற்கு விதிகள் இடந்தரா என்று சொல்லிவிட்டார். மேலும், அவர் "வழிகாட்டியாக இருப்பதற்கு ஒப்புக் கொண்ட டாக்டர் கே. சி. வரதாச்சாரி இதற்குத் தகுதி யற்றவர்; தமிழ் இல்லத்தில் பேசும் வைணவராக இருந்த போதிலும் தமிழ் படிக்கத் தெரியாதவர்; தெலுங்குதான் 1. குமரகுருபர அடிகள்: மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - காப்பு. திருமால்-2