பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஎச். டி ஆய்வுக்கு இசைவு தரமறுப்பு 75 அவர் படித்த மொழி. அதிலும் அவருக்கு ஆழ்ந்த புலமை இல்லை. வடமொழியிலும் இதே நிலை தான்' என்று அவரைக் குறைவாகப் பேசினார். எனக்கு ஒன்றுமே புரிய வில்லை. செயற்பட முயற்சி எடுக்க முடியாத நிலை வந்து விட்டது. மேற்கூறியவாறு தவறாக மதிப்பிட்டுப் பேசும் போது துணைவேந்தர் பேச்சில் "கோபத் தொனியும்’ இருப்பது தெரிந்தது. என்மீது கோபம் இல்லை என்பது தெளிவு. இருந்தால் கோபம் டாக்டர் வரதாச்சாரிமீது தான் இருக்கவேண்டும் என ஊகித்துக் கொண்டேன். இருந்த போதிலும், காரணத்தைத் தெரிந்து கொள்ள என் மனம் விழைந்தது. திரு டி. இ. வீரராகவனிடம் உரை யாடிக் கொண்டிருந்தபோது ஒருவாறு காரணம் புரிந்தது. திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் நியமனத்தில் திரு டி. சதாசிவ ரெட்டிக்கும், (டி. எஸ். ரெட்டி என்றே வழங்கப் பெறுபவர்)" பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடுவுக்கும் போட்டி இருந்ததாகவும் இப்போட்டியில் டாக்டர் வரதாச்சாரி திரு. ரெட்டியின் சார்பாக உழைத்ததாகவும், இதனைத் திரு நாயுடு அறிந்து கொண்டதாகவும், அதிலிருந்து திரு நாயுடு டாக்டர் வரதாச்சாரியின் மீது சினங் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் திரு. வீரராகவன். மேலும் அவர் எல்லாத் தகுதியிருந்தும் டாக்டர் வரதாச்சாரியாரைப் பேராசிரியராக உயர்த் தாமைக்கும் இதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்றும், இதனால்தான் அவருக்குப் பதவி உயர்வு தராமல் வெளியிலிருந்து ஒப்பந்தத்தில் பேராசிரியர் tỹ. 65 - புருஷோத்தம் கொணரப்பட்டுள்ளார் என்றும், டாக்டர் வரதாச்சாரி ஒய்வு பெறும் வரையிலும் பேராசிரியர் 2. சென்னை மாநிலத்தில் பல்லாண்டுகளாகக் கல்வித் துறையில் பணியாற்றி கல்வித்துறை இயக்குநராக ஒய்வு பெற்றவர். அனந்தப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.