பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 நினைவு குமிழிகள்-4 புருஷோத்தம் ஒப்பந்தம் சட்டிக்கப்படும் என்றும் விளக்க மும் தந்தார். காரணம் ஒப்புக்கொள்ளக் கூடியதாகவும் இருந்தது. பின்னர் டாக்டர் வரதாச்சாரியும் இக் காரணத்தை உறுதி செய்தார். ஆனால் அண்மையில் (சூலை-1984) திருவேங்கடவன் கலைக் கல்லூரியில் இயற்பியல் துறையிலிருந்து ஒய்வு பேற்ற திரு. ஏ. நடராசன் என் இல்லத்திற்கு வந்த போது வேறொரு காரணத்தையும் கூறினார். ஆந்திரம் தனி மாநிலமாகப் பிரியாதபோது திருப்பதி தேவஸ் தானத்தின் ஆதரவில் கலைக் கல்லூரி ஒன்று தொடங்கப் பெற்றது. அதைப் பார்ப்பதற்கு ஆய்வு ஆணையம் (Inspection Commission) sysärso p3 @3 sòrabantuli usò suo av # கழகம் அனுப்பியது. அதில் பேராசிரியர் எஸ். கோவிந்த ராஜுலு நாயுடு ஒர் உறுப்பினராக இருந்தார். டாக்டர் ஏ. எல். முதலியார் துணைவேந்தராக இருந்த காலத்தில் மிகப் பெரிய பதவியிலிருந்தவர்களும் நேர்மையும் ஒழுங்கு முறையும் தவறாதவர்களுமாக இருப்பவர்கள் பாடத் திட்டக் குழுக்களில் தலைவர்களாக இருப்பின் கல்வித்தரம் சிறந்த முறையில் இருக்கும் என்று கருதி பல்லாண்டுகள் T. M. நாராயணசாமிப் பிள்ளையவர்கள் தமிழ்க் குழுவிற்கும், திரு எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்கள் தெலுங்குக் குழுவிற்கும் தலைவர்களாக இருந்து வந்தனர். இதனால் பல்கலைக் கழகப் பேராசிரியர்களை நியமிக்க ஏற்படுத்தப்பெறும் தேர்வுக் குழுவிலும் (Selection committee) இடம் பெறுவர். திரு. நாராயண சாமிப் பிள்ளையவர்களும் திரு. கோவிந்தராஜுலு நாயுடு அவர் களும் மிக உயர்ந்த நேர்மையைக் கடைப்பிடிப்பவர்கள், ஒழுங்கு முறை தவறாதவர்கள் என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. பொது மக்களும் இவர்கள் மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர். திரு. பிள்ளையவர்கள் தமிழ்ப் பற்று கொண்டவர்: பக்தி இலக்கியங்களில் குறிப்பாக ஆழ்வார்