பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஎச். டி ஆய்வுக்கு இசைவு தரமறுப்பு 77 களின் ஈரத் தமிழில் மிக்க ஈடுபாடு கொண்டவர்.' இந்த ஈடுபாட்டின் காரணமாகவே இவரும், இவர் அளவுக்கு இந்த இலக்கியத்தின் ஈடுபாட்டில் எள்ளளவும் குறையாதவருமான முன்னாள் அமைச்சர் திரு. கே. வேங்கடசாமி நாயுடு அவர்களும் திருவையாற்று அரசர் கல்லுரரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த திரு பு. ரா புருடோத்தம நாயுடு அவர்களைச் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைக்குக் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்கள். இந்த நியமனத்தால் தமிழ் உலகுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம் மூன்று தமிழாக்க நூல்கள். அவை: ஒன்று, முப்பத்து ஆறாயிரப்படி’ என்றும், நம்பிள்ளை ஈடு' என்றும் வழங்கப் பெறும். மணிப்பிரவாள நடையிலுள்ள நூல் ஈட்டின் தமிழாக்கம்’ என்பது பத்துத் தொகுதிகளாக வெளி வந்தது. இரண்டு, அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அவர்களால் மணிப்பிரவாள நடையில் சூத்திரங்களாகச் செய்யப் பெற்று மணவாள மாமுனிகளால் மணிப்பிரவாள நடை யிலேயே உரையும் எழுதப் பெற்ற ஆசாரிய ஹிருதயம்’ என்ற நூலின் தமிழ்ாக்கம் இரண்டு தொகுதிகளாக வெளி வந்தது. மூன்று, பிள்ளை உலக ஆசிரியரால் மணிப்பிர வாள நடையில் சூத்திரங்களாகவும், மணவாள மாமுனி களால் மணிப்பிரவாள நடையிலேயே உரையும் எழுதப் பெற்ற ரீவ சண பூஷணம்’ என்ற நூலின் தமிழாக்கம் ஒரே தொகுதியாக வெளி வந்தது. இந்த மூன்று தமிழாக்க நூல்களும் தமிழ் மட்டுமே அறிந்துள்ள அறிஞர் கட்குக் கிடைத்தற்கரிய பெருஞ் செல்வமாகும். திரு. எஸ். கோவிந்தராஜுலு நாயுடு அவர்களின் தெலுங்குப் புலமையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. 3. இவர் மாவட்ட வாரியத் தலைவர், இந்த அற நிலை ஆட்சித் துறை ஆணையர், அரசு பொதுப் பணித்தேர்வு ஆணைய உறுப்பினர், தலைவர் என்ற பெரும்ப்ொறுப்புகளில் பணியாற்றியவர்.