பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நினைவு குமிழிகள்-4 ஆனால் சென்னை சட்டக் கல்லூரியின் பேராசிரியர், கல்லூரி முதல்வர், பின்னர் சட்டத் துறை இயக்குநர் என்ற பெரும் பதவிகளை வகித்தவர். இத்தகையவர் சென்னைப் பல்கலைக் கழகத் தெலுங்கு பாடதிட்டக் குழுவின் தலைவராக இருப்பதில் குறையொன்றும் இல்லை. இத்தகைய பெரும் பொறுப்புகளை யெல்லாம் வகித்தவர் பல்கலைக்கழக ஆய்வு ஆணையத்தில் உறுப்பினராக வந்ததில் வியப்பில்லை. இவர் இங்கு வந்தபொழுது டாக்டர் கே. சி. வரதாச்சாரியார் கல்லூரியில் தத்துவத் துறைப் பேராசிரியராக இருந்தார். ஆய்வு செய்து கொண்டு வரும் பொழுது எப்படியோ திரு நாயுடு அவர் கட்கும் டாக்டர் வரதாச்சாரியாருக்கும் வாக்குவாதம் எழுந்து விட்டது. டாக்டர் வரதாச்சாரியார் புலமை மிக்கவர்; உணர்ச்சியுடன் பேசக் கூடியவர். எப்படியோ இவர் பேச்சு திருநாயுடு அவர்களின் மனத்தைப் புண் படுத்தி இருக்கவேண்டும். அன்றிருந்து இருவரிடையேயும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது. இக்கருத்து ல்ேற்றுமை இருவரிடையேயும் விரோதத்தையும் ஏற் படுத்தி இருக்கவேண்டும். இதுவே பின்னர் திரு நாயுடு அவர்கள் திருவேங்கடவன் பல்கலைக்கழகத் துணை வேந்தராக வந்தபொழுது வரதாச்சாரியார் பல்கலைக் கழகத்தின் துணைப் பேராசிரியர் பதவியைப் பெற்றாலும் பேராசிரியர் பதவியைப் பெற முடியவில்லை. துணை வேந்தரே தடையாக இருக்கும்போது டாக்டர் வரதாச் சாரியாரால் என்ன செய்ய முடியும்? இவருக்கு மேல் பேராசிரியர் டி. ஏ. புருஷோத்தம் தலைவராக இருந்த படியால் துணைத்தலைவராக இருக்கும் பேறும் இவருக்குக் கிட்டவில்லை. தாம்தாம்முன் செய்தவினை தாமே அநுபவிப்பார் பூந்தா மறையோன் பொறிவழியே..வேந்தே ஒறுத்தாரை என்செயலாம்? ஊர்எல்லாம் ஒன்றா வெறுத்தாலும் போமா விதி.* என்ற ஒளவைப்பாட்டியின் பொன்மொழியும், 4. நல்வழி - 30