பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிஎச். டி ஆய்வுக்கு இசைவு தர மறுப்பு 79 தானே புரிவினையாற் சாரும் இருபயனும் தானே அநுபவித்தல் தப்பாது-தான் நூறு கோடிகற்பஞ் சென்றாலும் கோதையே செய்தவினை நாடிநிற்கும் என்றார் நயந்து.' என்ற பெரியாரின் வாக்கும் இப்போது நினைவிற்கு வருகின்றன. எல்லா நிலையிலும் காவடக்கம் இருந்தால் இயன்றவரையில் தொல்லைகளைத் தவிர்க்கலாம் என்பது என் அநுபவம். யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு." என்ற வள்ளுவரின் திருவாக்கு நினைவிற்கு வருகின்றது. தென்னை மரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி ஏறிய கதை போல, டாக்டர் கே. சி வரதாசசாரி, பேராசிரியர் எஸ். கோவிந்தராஜுலு நாயுடு இவர்களி டையே ஏற்பட்ட மோதல் என் தலையில் வந்து விடிந்ததே என்று நினைத்து வருந்தினேன். பி.எச்.டி.ஆய்வுக்கு என்ன செய்யலாம் என்ற ஏக்கமே என் மனத்தில் அடிநாதமாக ஒலித்துக் கொண்டுருந்தது. 5. நீதி வெண்பா-47 (இயற்றினார் பெயர் தெரிய வில்லை.) 7. குறள்-127 கி. குறள்-127