பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-166 10. நூல் வெளியீட்டு விழாவும் சோதிடப் பலனும் 1 96 2-பிப்பிரவரி என்று நினைக்கின்றேன். திருப்பூரிலிருந்து கே. ஆர். சுப்பிரமணியம் என்ற ஒரு. சோதிடா என்னைத் தேடிக்கொண்டு என் சிறிய அறைக்கு வந்து சேர்ந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஐயா, நான் திருவேங்கடவனைப் பற்றி ஒரு சிறு கவிதை நூல் படைத்துள்ளேன். இந்த நூல் ஒரு பிரார்த்தனையின் அடிப்படையில் எழுந்தது. நான் திருப்பூரில் தெருவில் கால்நடையாகச் சென்று கொண்டிருந்தேன். இரண்டு தெருக்கள் சந்திக்கும் இடத்தில் ஒர் ஒரத்தில் நடந்து கொண்டிருக்கும்பொழுது பாரம் ஏற்றாமல் சென்று கொண்டிருந்த ஒர் இரட்டை மாட்டு வண்டி தெருவில் திரும்பியது. வேகமாகத் திரும்பிய நிலையில் வண்டியின் பின்பகுதியின் கனத்த சட்டம் என் இடது புயத்தில் வேக மாகத் தாக்கியது என் புய எலும்பு இரண்டாக முறிந்தது நல்லவேளையாக அது சாதாரண முறிவுதான், எங்கள் ஊரிலுள்ள ஒரு நாட்டு மருத்துவரிடம் கட்டு கட்டிக் கொண்டேன். ஆங்கில மருத்துவரை நாடிச் சிகிச்சை பெறுவதற்கு என் வறுமைச் சூழ்நிலை இடந்தரவில்லை. யாதொரு தொல்லைரிமின்றி பழையபடியே இருந்த நிலையில் கை கூடினால் பொற் கங்கணம் பூண்டு, ஏழுமலையான்மீது ஒரு பதிகம்பாடி பொற்கங்கணத்தையும் நூலின் 100 படிகளையும் உண்டியில் போடுவதாக நேர்ந்து கொண்டேன். கை பலழய நிலையை அடைந்தது. பாடல்களை யாத்து நூலையும் அச்சிட்டு விட்டேன். இதனைத் திருமலையில் இறைவனின் திருமண மண்டபத்தில் எடுக்க நினைக்கும்.