பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வெளியீட்டு விழாவும் சோதிடப் பலனும் 8座 வெளியீட்டு விழாவில் தலைமை தாங்கவேண்டும்' என்று வேண்டினார். "நான் மிகச் சிறியவன்.சென்னையிலிருந்து யாராவது பெரியவர்களைப் பார்த்து அவரைக் கொண்டு வெளி யிடுவது சிறந்ததல்லவா?’ என்றேன். தாங்கள் சொல்வது சரிதான். ஒரு சிறந்தவைண வரைக் கொண்டு வெளியிடத்தான் நினைத்துத் திரு. பு. ரா. புருடோத்தம நாயுடு அவர்களை நாடி வேண்டுகோள் விடுத்தேன். அவர் சொன்னார்: "நான் திருமண் காப்பிட்ட வைணவன். என்னைவிடச் சிறந்த முறையில் திருமாவிட ம் அன்பு பூண்டு திருப்பதியில் திருமண் காப்பிடாத வைணவர் பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் இருக்கின்றார். அவர் அண்மையில் காரைக்குடியிலிருந்து திருப்பதி வந்து திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். என்னைவிட அவரே சிறந்தவர். அவரைக் கொண்டு விழாவை நடத்துங்கள்’ என்று. ஆதலால்தான் தங்களை நாடி வந்தேன். தங்கும் இடத்து முகவரியையும் தந்து காலை ஏழரை மணிக்குள் அறையில் பார்க்கலாம் என்று குறிப்புடன் அனுப்பினார். எனவே, தங்களை நாடி வந்தேன்' என்றார். எனக்கோ மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. மாருதி யல்ல னாகில் நீஎனும் மாற்றம் பெற்றேன் யாரினி என்னோ டொப்பார் என்பதோர் இன்பம் உற்றான்." என்று அங்கதன் மகிழ்ச்சியுற்றதுபோல் எனக்கும் மகிழ்ச்சி உண்டாயிற்று என்று கூறலாம். சிறந்த தமிழறிஞர்; திருமாலின்மீது அளவற்ற பக்தியுடையவர் இப்படி 1 . கம்ப. யுத்த. அங்கதன் துர்து-13 தி-6