பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நினைவுக் குமிழிகள்.4 என்னைத் தன்னைவிட உயர்ந்தவர் என்று கூறியதைக் கேட்டபோது ஒரு பக்கம் நாணமும் மற்றொரு பக்கம் மகிழ்ச்சியும் உண்டாயின என்பதைச் சொல்லவும் வேண்டுமா? மேலும் கே. ஆர். சுப்பிரமணியம் தம்மைப் பற்றித் தெரிவித்தது: நான் சாதாரண ஏழை. சோதிடன்: இராஜராஜேசுவரி உபாசகன். முப்பதாண்டு கட்கு முன்னர் அன்னுளர் K. கோவிந்தசாமி நாயுடு என்ற செல்வர் என்னைத் தம் பருத்தி ஆலையின் சோதிட ராக, திங்கள் ஒன்றுக்கு ரூ. 25/- ஊதியத்தில் நியமித்துக் கொண்டார். கோள்கள் இயக்க நிலை தெரிந்து பருத்தி விலை ஏறும் இறங்கும் என்று தெரிவிப்பது என் பணி, இதுகாறும் என் கணிப்பு தவறுவதில்லை. 'விலை ஏறும் பருத்தி கொள்முதல் செய்யலாம் என்பேன். அவரும் என் சோதிடத்தை நம்பி வாங்குவார். நல்ல இலாபம் கிடைக்கும். இதுகாறும் அவர் செல்வநிலை ஏற்ற நிலையிலேயே இருந்து வருகின்றது. எல்லாம் என் வழிபடு தெய்வமாகிய இராஜ இராஜேசுவரியின் திருவருள் " என்றார் . மேலும் தொடர்ந்து, இன்னும் கேளுங்கள். அண்மையில் அவர் திருமகளார்ன் திருமணம் சிறப்புடன் நடைபெற்றது. மணமகனைத் தேடி உறுதிப்படுத்துவதில் சிரமம் இருந்தது. பிறகு அஃது ஒருவாறு நிறைவு பெற்றது. இதன் தொடர்பாகத் தமது திருமகளுக்கு நல்ல முறையில் திருமணம் கூடினால் திருவேங்கடமுடை யானுக்குத் திருமண உற்சவம் செய்து வைப்பதாக நேர்ந்து கொண்டார். இன்னும் ஒரு திங்களில் அது நடைபெறும். அப்போது நூல் வெளியீடும் செய்வதாக உத்தேசம். இன்றே திருமலை சென்று நாள் குறிப்பிட்டுத் திருமண உற்சவத்திற்குரிய கட்டணம் செலுத்தப் போகி றோம், திரு. நாயுடு அவர்களே நான் யாத்த பாடல்களை அச்சிட்டுக் கொள்ள பொருளுதவி செய்தார். நூல் ரீநிவாசப் பெருமான் திருவருட்பாக்கள்' என்ற