பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வெளியீட்டு விழாவும் சோதிடப் பலனும் &$ தலைப்பில் அச்சாகின்றது. இதில் உயிர் வருக்கப் பதிகம் (12 ஆசிரிய விருத்தங்கள்), * பத்மாவதி பரிணயம் (32 அடிகள் கொண்ட ஒன்பது ஆசிரிய விருத்தங்கள்), தலமகிமை (15 வெண்பாக்கள்) அடங்கி அள்ளன' என்றார். 12-3-1962 அன்று திருவேங்கடவன் திருமண விழா நடைபெற்றது. திருப்பூர்ப் பகுதியிலிருந்து சுமார் 25 பெருமக்கள் எழுந்தருளியிருந்தனர். இவர்கள் தங்குவதற் கென்று நான்கு குடில்களை (Cottages) ஏற்பாடு செய்திருந் தார். எம்பெருமான் திருமண மண்டபத்தில் நூல் வெளியீடு செய்வது மரபில்லை என்று தேவஸ்தானத்தார் சொல்லிவிட்டதால் தனியாருக்குச் சொந்தமான நாரத மந்திரம்’ என்ற விடுதியில் நூல் வெளியீட்டு விழா தடைபெற்றது. திரு. புருடோத்தமநாயுடு அவர்களை நினைந்த வண்ணம் தலைமைப் பொறுப்பேற்றேன். சிறிய கூட்டமாக இருந்தாலும் பக்தியுடன் வெளியீட்டு விழா நடைபெற்றதால் கே. ஆர். சுப்பிரமணியத்தின் உள்ளம் குளிர்ந்தது. தமது பிரார்த்தனை நிறை வேறினமை கண்டு பெரு மகிழ்ச்சியடைந்தார். வெளியீட்டு விழாவில் எனக்கு வாசித்தளித்த நன்றியுரைப் பாடல் இது. ஆசிரிய விருத்தம் திருவோங்கி வளர்கின்ற வடவேங்க டத்திலகி திசையெங்கு மொளிய ரப்பித் திகழுமெழில் ஜெயசீநி வாசனுள மேமகிழ செந் தமிழி லுயிரெ ழுத்தே செப்புமொழி முதலாக ஒப்பியுள பதிகமொடு சீரிலகு தாமரை யின்மேல் ஜென்மித்த பதுமவதி திருமண நி கழ்ச்சிதனை சீருரவ மைத்து பாடி