பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 4 நினைவுக் குமிழிகள்-4 ஒரு வடிவி லாக்கிநல சீநிவா சச்செம்மல் உயர்திருவ ருட்பா வெனும் ஒண்பெயர மைத்துப்ப திப்பித்த ரங்கேற்று முரியசபை தலைமை தாங்க ஒத்துளம னத்தினனி யற்றமிழொ டாங்கிலமு மோதிநெறி வழுவி லாதான் உகமுதலி லிலகுவட வேங்கடவன் பல்கலைக ளுதவுமுயர் கல்வி நிலையம் பெருமைமிக நிலவுதமிழ்த் துறையிலினி தாந்தலைமை பெற்ற குண முற்ற நண்பன் பேசரிய பிரசங்க மதையெங்கு மழையென்ன பேசுதிற னுற்ற புலவன் பெட்பிலகு வேள்சுப்பு ரெட்டியா ரிவணுற்று பிரியமொடு சொல்வ ழங்கிப் பிரபைதர வுதவியதி லுளமகிழ்வு மிகநமது பெரிதான நட்பி னுயர்வால் மருவோங்கு மலர்மாலை யணிவேங்க டத்திறைவன் மாணடிவ ணங்கி நின்றும் மதுவுமிழ்ச கஸ்த்ரதள வனசவதி தேவியருள் மன்னிதிறை வாகி நாளும் மனைவியொடு மக்கணல மனையறமி சைத்திலது வாழ்த்தலொடு தலைமை கொண்ட மாண்பினை ம தித்தெமது நன்றிநவில் கின்றனமும் மனதுகொள வேண்டு மினிதே. இந்தப் பாடலைக் கொண்டு திரு. சுப்பிரமணியத்தின் தமிழ்ப் புலமையையும் சொல்வளத்தையும் அறிந்து கொள்ளலாம். இந்த நூல் அரங்கேற்ற விழாவிற்கு திருப்பூர் நஞ்சப்ப உயர்நிலைப்பள்ளித் தமிழ் ஆசிரியர் திரு. கே. பழகிச்சாமிப் புலவரும் அப்பள்ளித் துணையாசிரியர்