பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வெளியீட்டு விழாவும் சோதிடப் பலனும் 85 டி. எஸ். சோமசுந்தரம் பிள்ளையும் வந்திருந்தனர். இவர்கள் கே. ஆர். சுப்பிரமணியத்தைப் பற்றிச் சொன்னது : நண்பர் சுப்பிரமணியம் சிறந்த புலவர் அல்லர்; முறையாகத் தமிழ் பயின்று தமிழறிவு பெற்றவரு மல்லர். தம்மை மாம்பழக் கவிராய நாவலர் பரம்பரையில் வந்தவராகச் சொல்லிக் கொள்வார். இவர் ஒர் அருட் கவிஞர். இராஜராஜேசுவரியை நினைத்துக் கொண்டு பாடத் தொடங்கினால் பாக்கள் தாமாக வரும். அவருக்கு அடி, சீர் முதலியவை பிரித்து எழுதத் தெரியாது; யாப்பிலக்கணமும் தெரியாதவர். அவர் சொல்வதை எம் போன்ற ஒரு தமிழ்ப் புலவர் எழுதினால் அது சிறந்த ஒரு பாடலாக அமையும். அப்படி நாங்கள் எழுதினவை தாம் இந்நூலிலடங்கிய பாடல்கள். தவிர, நல்ல ஒரு சோதிடர். இராஜ ராஜேசுவரியின் அருள் இருப்பதால் இலர் கூறும் சோதிடப் பலன் பெரும்பாலும் தவறாது’’ என்றனர். எங்களுர் (கோட்டாத்துரர்) வள்ளுவப் பண்டாரம், வேலூர் வாத்தியார், பொற்கொல்லர் குமாரசாமி ஆசாரி, என் பள்ளித் தோழர் கே. பி. சுப்பையர், ஆகியோர் என் சாதகக் குறிப்பை ஆய்ந்து சொன்னவை யெல்லாம் பெரும்பாலும் சரியாகவே நடைபெற்று வருவதைக் கண்டுள்ளேன். இப்போது என் மனத்திலிருந்த பெருங்கவலை நான் டாக்டர் பட்டம் பெறுவேனா?" என்பதுதான். எம்பெருமான் திருமணம் முடிந்து, நூல் அரங்கேற்ற விழா நிறைவெய்தி பிரசாதங்களை உட் கொண்டு நாங்கள் மனநிறைவெய்தி இருக்கும் சமயம். சுப்பிரமணியம் அவர்களிடம் என் சாதகக் குறிப்பை எழுதிக் காட்டி (இது எனக்கு மனப்பாடம்; நடப்புதிசை புத்தி விவரங்கள் வரை தெரியும்) பலன் சொல்லுமாறு வேண்டினேன். எனக்கு மேல்படிப்பு உண்டா? பிஎச் டி. பட்டம் பெற ஊழ் உண்டா? இதை மட்டும் நன்கு ஆய்ந்து சொன்னால் போதும்' என்றேன்.