பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

繁 எழுந்த குமுறல்கள். அவையே பின்னர்க் குமிழிகளாக மு. கிழ்த்துள்ளன. திருப்பதி வாழ்வில் பேராசிரியர்ர் ரெட்டியார் அவர்கள் சுகப்பட்டதை விடத் துன்பப்பட்டது தான் மிகுதி. "திருப்பதி வாழ்வில் பூமகளின் கடைக்கண் நோக்குச் சரியாக இல்லை; ஏன் சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம்' (ப. 86) என்ற தொடர்கள் அவர் அடிமனதில் உள்ள வேதனைக் குமுறல்கள். தியாக உணர்வும், உண்மையான தமிழ்ப்பற்றும், எதையும் தாங்கும் இதயமும் பலனை எதிர்ப்பாராது கடமை யாற்றும் கண்ணியமும் நிறைந்த பேராசிரியர் அவர்கள் இத்துன்பங்களை யெல்லாம் பொருட்படுத்தாது என் கடன் பணி செய்து கிடப்பதே" என்று மனந்தளராது தமிழ்ப்பணி செய்து வந்திருக்கிறார். பேராசிரியர் ரெட்டியார் அவர்கள் திருவேங்கடவன் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையை உருவாக்கிய சிற்பி (The Architect of the Dept of Tamil of Sri Venkateswara University) என்பது தமிழ்கூறு நல்லுலகம் நன்கறிந்த உண்மை. இந்தச் சிற்பியின் வேதனைகளை, கனவுகளை கற்பனைகளை, இந்நூலில் படிக்கும்போது. மெய்சிலிர்க் கிறது. 'உண்ணுஞ் சோறுபருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணனே’’ என்று எண்ணிய ஆழ்வார் நெறியில் ஆழங்கால் பட்ட பேராசிரியர் அவர்கள் திருப்பதியில் கால்வைத்த நாள் முதல் தமிழ்த்துறை தோற்றுவிப்பது ஒன்றையே தம் வாழ்வும் வளமுமாகக் கொண்டிருந்தார். காரைக்குடியில் பெரியதொரு புகழ்மிக்க கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி, முதல்வராகும் வாய்ப்பையுந் துறந்து, திங்கள் தோறும் ரூ. 153/. இழப்பில் திருவேங்கடவன்