பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. நினைவுக் குமிழிகள்-சி திரு. சுப்பிரமணியமும் என் உள்ளக் கவலையை நன்கு புரிந்து கொண்டார். இராஜ ராஜேசுவரியை நினைந்து சொன்னார் : "உங்கள் சாதகக் குறிப்பில் (சிம்மலக்ன சாதகம்) லக்னத்திற்கு 2-ல் புதன் உச்சத்தில் இருக்கிறான். புதன் வாக்குஸ் தானாதிபதி. உங்கட்குப் படிப்பு உண்டு. உயர்ந்த படிப்பு வரையில் எட்டுவீர்கள். ஆனால் புதனுடன் செவ்வாயும் சேர்ந்திருக்கின்றான். அதனால் உங்கட்கு எப்போதும் ஏதாவது தொந்தரவு வந்து கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் விடாது. முயன்று கொண்டிருப்பீர்கள். உங்கள் சுறுசுறுப்பிற்கும் உண்மையாகக் கல்வியில் கொண்டிருக்கும் ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் கட்டாயம் பலன் இருக்கும். சோர் வடையாமல் முயன்று கொண்டிருப்பீர்கள். ஏழுமலை யான் நிழலில் இருக்கின்றீர்கள். அவன் அருளும் உண்டு. இராஜராஜேசுவரியின் அருள்படி நீங்கள் வெற்றியடை வீர்கள்’’ என்று. இவையெல்லாம் இப்போது மனத்தில் குமிழியிட்டெழுகின்றன. காரைக்குடியிலிருந்தபோது திருப்பாரிதிப்புலியூர் சுகர் நாடி சோதிடம் திரு. S. T. S. செயகாந்தி நாயுடு நாடி சோதிடப்படி சந்திர மகாதிசையில் சில ஆண்டுகள் மனைவி மக்களை விட்டு மலைப் பகுதியில் மிகவும் கஷ்ட மான நிலையில் வாழ நேரிடும்; இக்காலத்தில் உயர்கல்வி யில் ஈடுபாடு அதிகம் இருக்கும். மேலதிகாரிகளின் உதவி இராது தொல்லைப் படவும் நேரிடும். இறுதியில் ஒரளவு நலமாகும்' என்று சொன்னதையும் நினைவுகூர்கின்றேன். திருப்பதி வாழ்வில் சுகப்பட்டதைவிட துன்பப்பட்டது. தான் அதிகம் என்பதை அநுபவ வாயிலாக அறிந்தவ னல்லவா? திருப்பதி வாழ்வில் பூமகளின் கடைக்கண் நோக்கு சரியாக இல்லை; ஏன் சுத்தமாக இல்லை என்றே சொல்லலாம். ஆனால் கலைமகளின் அருள் அபரிமித மாகவே இருந்தது. சிறு வயதிலேயே தந்தையொடு கல்விபோம் என்ற முதுமொழி இருப்பினும், நாமகள்