பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வெளியீட்டு விழாவும் சோதிடப் பலனும் 87 அருள் இருந்தமையால்தான் எல்லா மட்டங்களிலும் கல்வி நன்முறையில் கற்க முடிந்தது. பணியிலிருந்து கொண்டே கற்று வித்துவான், பி.ஏ., எம்.ஏ., பிஎச்.டி பட்டங்களைப் பெறமுடிந்தது. இக்காலத்தில் பூமகள் அருளால் வயிற்றுக்குச் சோறு வசதியாகக் கிடைத்தது: அணிவதற்கு ஆடையும் கிடைத்தது. இவையும் இல்லாவிடில் எப்படிக் கவலை யின்றிக் கல்வியில் ஈடுபட முடியும்? கலைமகள் பாரதியாருக்குப் பலவிதமாகக் காட்சியளித்ததுபோல் எனக்கும், தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம் தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்; உய்வ மென்ற கருத்துடை யோர்கள் உயிரினுக்குரி யாகிய தெய்வம்; செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர் செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்: கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம், கவிஞர் தெய்வம் கடவுளர் தெய்வம்.” இவ்விதமாகக் காட்சியளிக்கின்றாள். அவள் அருளால் தான் அறுபது அகவை தாண்டிய பிறகும் அதிகம் படிக் கின்றேன்; எழுதுகின்றேன். அவள் அருளால்தான் உடல் வளமும் மன நலமும் நன்றாக உள்ளன. அகவை: முதிர்வினால் அவ்வப்போது சோர்வு தோன்றினாலும் மனவளம் குறைவதில்லை; மாறாக வளர்ந்து வருகின்றது. அவள் அருளால் கண்ணொளியும் நன்றாகவே உள்ளது. செல்வங்கள் கொழித்து நிற்கும் பெரிய பிராட்டியார், நாரணன் மார்பினிலே-அன்பு நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்.' 'அகலகில்லேன் இறையும்' என்று அவன் மார்பில் நிலைத்து வாழ்பவள். மக்கள், செல்வத்தை விரும்புவது 2. தோ. பா: வெள்ளைத் தாமரை-4. 3. தோ. பா : திருமகளைச் சரண்புகுதல்-4