பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& நினைவுக் குமிழிகள்-4 போல் கல்வியை அதிகமாக விரும்புவதில்லை. இன்றைய உலகில் குறுக்கு வழியில் சிலருக்குத் திருமகள் அருள் கிடைத்து விடுகின்றது. ஆனால் கலைமகள் அருளைக் குறுக்கு வழியினால் அடைய முடிவதில்லை; உழைத்து உழைத்து, காலமெல்லாம் ஆழங்கால் பட்டுதான் அவள் அருளைப் பெற முடிகின்றது. இன்றைய உலகில் இவ் உண்மையை நேரில் அநுபவத்தில் பார்க்கின்றோம். திருமகள் சிலரிடம் "சடுகுடு விளையாடுவாள். "ஆறுஇடும் மேடும் மருவும்போல் அம்செல்வம் மாறிடும் ஏறிடும்" என்பது ஒளவைப் பாட்டியின் திருமொழி. அகடுஉற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். ' என்பது சமண சமயப் பெரியாரின் பொன் மொழி. கூத்தாட் டவைகுழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிழிந் தற்று. " என்பது வள்ளுவப் பெருமானின் பொய்யா மொழி. செல்வத்தின் அற்கா இயல்பினை அருமையான உவமை யினால் விளக்கியிருப்பது சிந்தித்து மகிழத் தக்கது. பொருள் நோக்கு ஒரு புறமிருக்க சொல் நோக்கை யொட்டிய ரசிகமணி டி. கே. சி.யின் விளக்கம் அற்புத மானது. செல்வம் சேர்வதற்குக் காலம் ஆகும் என்பதை முதல் அடியின் நீண்ட நான்கு சீர்களாலும், செல்வம் போவதற்குக் குறைந்த காலம் போதும் என்ற குறிப்பை இரண்டாம் அடியின்மூன்று சிறுசீர்களாலும் காட்டியிருப்ப தாகக் கூறுவர்ரசிகமணி,சினிமா கொட்டகை நிறைவதற்கு அதிகக்காலம் ஆவதையும் கூட்டம் கலைவதற்குக் குறைந்த 4. நல்வழி-32 5. நாலடி-2 6. குறள்-332