பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல் வெளியீட்டு விழாவும் சோதிடப் பலனும் 89 காலம் ஆவதையும் விளக்கும் முகத்தான் செல்வம் சேர் வதற்கு ஆகும் அதிகக் காலத்தையும் போவதற்கு ஆகும் குறைந்த காலத்தையும் முறையே நீண்ட சீர்களாலும் குறுகிய சீர்களாலும் குறிப்பிட்டுள்ள நயத்தை எடுத்துக் காட்டும் ரசிகமணியின் ரசிக உள் ளத்தை வியந்து பாராட்ட முடிகின்றது. ஆனால் பரிசுச் சீட்டுகள் நடை யாடும் இக்காலத்தில் திடீர்க் குபேரர்கள் ஆவதற்குப் .புதிய குறள் எழுதப் பெறல் வேண்டும். கலைமகள் இத்தகைய திருவிளையாடல்கள் புரிவ தில்லை. ஒருவர் உயர் கல்வி பெறுவதற்கு வருந்தி உழைக்கவேண்டும். இரவு பகலாகக் கண் விழித்துப் படிக்கவேண்டும்; பக்தியுடன் அணுக வேண்டும். புலமை பெறுவதற்கு எந்த விதக் குறுக்கு வழியும் இல்லை. காளமேகப் புலவர் காளி உபாசகராக இருந்திருக்கலாம். அது போலவே சாதுர்யமாகவும் நகைச்சுவையாகவும் பேசும் தெனாலிராமனும் காளி உபாசகனாகத் திகழ்ந் திருக்கலாம். இருவரும் காளிதேவியின் அருளால் புலமை பெற்றதையும் விகடகவி ஆனதையும் காளி தேவியின் அருள் என்று கூறுவது நம் நாட்டு மரபினை யொட்டிய கதைகளாகும். இருவர் நாவிலும் தாண்டவ மாடியவள் நாமகளே என்பதை நாம் அறிதல்வேண்டும். "எல்லாம் சக்தி மயம்' என்ற பாரதியாரின் கொள்கையை அறிந்த நமக்கு இக்கதைகளின் உட்பொருள் புலனாகாமற். போகாது. திருமகள் பாரதியாரைப் புறக்கணித்தது போலவே என்னையும் புறக்கணிக்கின்றாள். அவர் வாக்காலேயே, என்ன பிழைகள் கண்டோ-அவள் என்னைப் புறக்கணித் தேகிடுவாள். என்று தானும் நைந்து கூறுகின்றேன். இந்நிலைமைக்கு,