பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} நினைவுக் குமிழிகள்-சி இருவேறு உலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. ' என்ற வள்ளுவர் வாய்மொழியின் ஒளியில் உண்மை காண் கின்றேன். அமைதியும் பெறுகின்றேன். குமிழி-167 11. அறிவுக்கு விருந்து-அவதாரம் 1962-care, விடுமுறையில் காரைக்குடிக்கு. வந்தேன். சிறுவர்கள் உயர் நிலைப் பள்ளியில் தமிழ், மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்டு கல்வி கற்று வந்தனர். இவர்களின் படிப்பின் பொருட்டே குடும்பம் காரைக்குடியில் இருக்கவேண்டியிருந்தது. நான் கல்வி கற்ற காலத்தில் பொருளாதார முட்டுப்பாட்டால் சிரமப் பட்டதை அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இவர்கள் கல்வி சிறந்த முறையில் அமையவேண்டும் என்று ஒயாத கவலை கொண்டிருந்தேன். இளையவனின் தொடக்கக் காலக் கல்வியின் பொறுப்பை (முதல் வகுப்பு முதல் எட்டு. வகுப்பு வரை) திரு. A இராமசாமி அய்யர் என்ற ஒய்வு பெற்ற ஆசிரியரிடம் விட்டு வைத்திருந்தேன். முதல் மகனையும் தொடக்கத்தில் இவர் தான் கவனித்து. வந்தார். கருவிலே திருவமைந்த ஆசிரியர்களும் தியாக உணர்வு கொண்ட ஆசிரியர்களும்தான் சிறுவர்களின் கல்வியை நன்கு கவனிக்க முடியும் என்பது என் கணிப்பு என் கல்வி வாழ்க்கையில் எனக்கு ஆசிரியர்களாக 7. குறள்-374,