பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"அறிவுக்கு விருந்து'-அவதாரம் 9 I' அமைந்தவர்களில் ஒரு சிலரும். நான் பயிற்சிக் கல்லூரியில் பணியாற்றிய பொழுது கல்வி பற்றிய பல ஆங்கில நூல் களைக் கற்றுத் தெளிந்த அநுபவமும் இக் கணிப்பிற்கு அளவுகோலாகத் துணை செய்தது. விடுமுறையில் காரைக்குடியில் இருந்தபொழுது இது காறும் எழுதி வெளியிட்ட கட்டுரைகளில் சிலவற்றைத் தேர்ந் தெடுத்து ஒரு கட்டுரைத் தொகுப்பு நூல் வெளி யிட்டால் பட்டப்படிப்பிற்குப் பாடநூலாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யலாம் என்ற நினைப்பே இந்த முயற்சியில் என்னை ஈடுபடுத்தியது. ஆனால் இந்த முயற்சியில் என்னென்ன சிக்கல்கள் எழும்? போட்டி எப்படி இருக்கும்? நூலின் தரத்தைவிட பெரியவர்களின் பரிந்துரையின் பங்கு எப்படிச் செயற்படும்? என்ற எண்ண அலைகளும் என் மனத்தில் எழாமல் இல்லை. இந்த முயற்சியில் இவற்றையெல்லாம் சந்திக்கும்படியும் நேர்ந்ததைப் பின்னர் எழும் குமிழியொன்றில் விளக்குவேன். இந்த: நூலைத் தொகுக்க நினைக்கும் போது, வேண்டத் தக்க தறிவோய்நீ வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி யென்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய் யானும் அதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உனறன் விருப்பனறே' என்ற மணிவாசகப் பெருமானின் திருவாக்கும் என் மனத்தில் எழுந்தது. அதே சமயம், 1. திருவா. குழைத்த பத்து-6.