பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நினைவக் குமிழிகள்-4 ஈட்டும் பொருள் முயற்சி எண்இறந்த ஆயினும் ஊழ் கூட்டும் படிஅன்றிக் கூடாவாம்." என்ற பாட்டியின் வாக்கும் எழுந்தது. _ 6) 6) డF ஆண்டவனிடம் ஒப்படைத் து விட்டுப் பணியில் இறங்கி னேன். தினமணிச் சுடர்', குன்றக்குடி மணிமொழி' சிறப்பிதழ் (10-7-54), "தமிழ்நாடு’ புத்தாண்டு இதழ் (1953), கவிதையதுபவம், கவிதையும் கற்பனையும் (தினமணி புத்தாண்டு மலர்-1962), கவிதையும் நீதியும் (குமரி மலர்-அக்டோபர் 1950), மொழியும் சமயமும் (குமரி மலர்-ஜூன் 1952) பெளத்தர்கள் வளர்த்த பைந்தமிழ் (குமரிமலர்-ஜூலை 1956), கிறித்தவர்களின் தமிழ்த் தொண்டு (குமரிமலர்-திசம்பர் 1953) என்ற ஒன்பது கட்டுரைகளை இலக்கியம், திறனாய்வு, இலக்கிய வரலாறு என்ற மூன்று தலைப்புகளில் தலைப்புக்கு மூன்றாகப் பொருத்தமான முறையில் அமைத்தேன். காரைக்குடியில் புகழ்பெற்றுத் திகழ்ந்த செளத் இந்தியா பிரஸ் என்ற அச்சகத்திலேயே அச்சுக்குக் கொடுத்தேன். விடுமுறையில் இயன்றவரைச் சில படிவங்களைச் சரி பார்த்து அச்சிட்டேன். எஞ்சிய பார்வைப் படிவங்களைத் திருப்பதிக்கு அனுப்புமாறு சொல்லி விட்டு ஜூன் திங்கள் நடுவில் திருப்பதிக்குச் சென்று விட்டேன். ஜூலை, ஆகஸ்டுத் திங்களில் வேலை ஆமை வேகத்தில் நடை பெற்றது. செப்டம்பர் விடுமுறையில் காரைக்குடிக்கு வந்த பொழுது அச்சு வேலை முடிவு பெற்றது. நூலையும் 3. கலிங்கத்துப்பரணி ஆராய்ச்சி-என்ற தொகுப்பு நூலில் உள்ளது. 4. கவிதையநுபவம்'-என்ற நூலில் உள்ள முதல் கட்டுரை.