பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அறிவுக்கு விருந்து-அவதாரம் § 3

  • அறிவுக்கு விருந்து' என்ற பெயரில் (செப்டம்பர்-1962) வெளியிட்டேன். இஃது எனது பதினொன்றாவது வெளியீடு.

இந்த நூலுக்கு யார் அணிந்துரையையும் பெற முடிய வில்லை. என்மீது அளவற்ற அன்பு கொண்டிருத்த திரு. சா. கணேசன் அவர்களிடம் கூடப் பெற இயலாத நிலை. எப்படியாவது நூல் செப்டம்பரிலேயே வெளிவர வரவேண்டும் என்ற அவசரம் இதற்குத் தடையாக நின்றது. இறுதியாக நூலைத் தமிழ்க்கடல் சிவமணி' 'சிவம் பெருக்கும் சீலர் ராய. சொக்கலிங்கம் அவர்கட்கு, பக்குவமெய்ஞ் ஞானியென உலகம் போற்றும் பாரதியைக் கண்டுமகிழ் பேறு பெற் றான்; மிக்க நறுங் கலைத்தமிழ்நூல் ஒன்று கூடி வெண்ணிறு புனைந்ததென விளங்கும்சான்றோன்; தக்கதிரு வாசகத்தை மூன்று போதும் தலைதாழ்த்திப் பணிந்திடுவோன்; எங்கள் ராய சொக்கலிங்கன எனும் பெயர்கொள் தமிழ்க்கடற்குச் சொல்விருந்தாம் இச்சிறுநூல் உரிமையாகும். என்ற பாடல் மூலம் அன்புப்படையலாக்கினேன். பின்னர் இது பாடநூலாக அமைந்ததற்கு இவர் ஆசியும் துணை செய்திருக்கவேண்டும் என்பது என் அதிராத நம்பிக்கை. என் வாழ்விலும் தாழ்விலும் பெருந்துணை செய்த பெரு மகனார் இவர். நூலின் சில படிகளை கவிக்கோவில் கட்டமைத்து இரண்டு படிகளை இவர் திருவடிகளில் சமர்ப்பித்தேன். இவர் வி ரு ப் ப ப் ப டி திரு. எஸ்.கே. இராமராசன், திரு. மு. இராமசாமி (தமிழாசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி, இராசிபுரம்). திரு. பதுமநாபன் (முதல்வரின் தனி அலுவலர், அழகப்பர் பொறியியற் கல்லூரி, காரைக்குடி) இவர்கட்கும், என்னுடைய பல நண்பர்கட்கும் 25 படிகளை விநியோகம் செய்து மகிழ்ந் தேன். திருப்பதியிலும் சில நண்பர்கட்குத் தந்ததாக 5. குறள்-1110