பக்கம்:நினைவுக் குமிழிகள்-4.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

挚全 நினைவுக் குமிழிகள்-4 நினைவு. இதை விற்பதில் பல சங்கடங்கள் எழுந்தன. ஏராளமான படிகள் இலவசமாக சென்று கொண் டிருந்தன. என்னுடைய தற்பெருமை"யும் வறட்டுக் கெளரமும் இதற்குக் காரணம் என்பதை இப்போது உணர்கின்றேன். பணத்தின் அருமை தெரியாது இப்படி யெல்லாம் செயற்பட்டமைக்கு இப்போது வருந்து கின்றேன். இறுதியாக 40% விழுக்காடு கழிவு தந்து சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்திடம் படிகள் அனைத்தையும் (சுமார்-800) ஒப்படைத்தேன். போட்ட பணம் கைவந்து சேர்ந்தது; இதற்குப் பல ஆண்டுகளாயின. ஆசிரியர்கள்தாம் நல்ல நூல்கள் எழுத வேண்டும். எழுத்துப் பழக்கத்தைத் தொடக்கத்திலிருந்தே வளர்த்துக் கொள்ளவேண்டும். பல நூல்களைப் படித்தவண்ண மிருந்து தம் அறிவினைப் பெருக்கிக் கொள்ளவேண்டும். அதிகம் சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனையால் தான் எழுத வேண்டிய பொருள் மனத்தில் உதயமாகும். நல்ல முறையில் மாணாக்கர்கட்குக் கற்பித்து வந்தால் தாம் எழுதும் எழுத்திலும் தெளிவு பிறக்கும். உரைநடையும் ஆற்றொழுக்காக அமையும். டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர், திரு. வி.க., சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை, பன்மொழிப் புலவர் வே. வேங்கடராஜூலு ரெட்டியார், டாக்டர் மு.வரதராசன் இவர்கள் நடையைச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். பாடல்களைப் படித்துச் சுவைக்கும் பழக்கத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். சுவை பற்றிய வடமொழிவாணர்களின் கருத்துகளையும், திறனாய்வு பற்றிய பல நல்ல ஆங்கில நூல்களையும் கற்க வேண்டும். தம்முடைய அறிவுச் செல்வம் மிகுவதற்கேற்ப, தம்முடைய பயிற்றும் முறை துணை செய்யச் செய்ய, தம்முடைய கற்பிக்கும் திறனும் நன்முறையில் செப்பம் அடையும். 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' என்ற வள்ளுவர் வாக்கின் 5. குறள்-1110.